Thursday, July 23, 2009

அபுவாலுவின் பார்வைகள் பலவிதம்.....



என் பொண்ணுக்கு பூவென்றால் அலர்ஜி..
மனைவிக்கோ பூ பொன்னான மலர்..

ஒரு முறை காரில் பிரயாணம்..
வலது பக்கம் மனைவி தலையில் பூவுடன்..
இடது பக்கம் மகள்..

கார் பெட்ரோல் போட நின்ற போது
ஒரு வயதான பாட்டி பூ விற்றபடி
அதுவும் இடது பக்க கதவின் அருகில்..

பூ வேண்டாம் பாட்டி..என்றேன்..
காருக்காவது வாங்கி வையுங்க...என்றது பாட்டி
காரில் வச்சா அதுவும் சேர்த்து மணக்கும்..
இந்தப் பதிவின் முதல் வரி ஞாபகத்துக்கு வர
செய்வதறியாமல் திகைத்த கணம்..

மகள் தன் பையிலிருந்து
பணம் எடுத்தார்..
மனைவிக்கு சந்தோசம்.. அப்பாடா மகள் பூ வாங்கப் போகிறாள்..
எனக்கோ தர்ம சங்கடம்..அடடா நாமே வாங்கியிருக்கலாமோ என..

பாட்டியிடம் பணம் கொடுக்க..
பாட்டி பூவை அளக்க..
பூ வேணாம் பாட்டி.. நீங்க வச்சிக்குங்க என்றார் மகள்..

பிள்ளைகளுக்கு நாம் வாழ கற்றுக் கொடுக்கிறோம்..
பிள்ளைகளோ வாழ்க்கைன்னா என்னன்னு
நமக்கு கற்றுக் கொடுக்கிறார்கள்..

அபுவாலு



Saturday, July 18, 2009

my 'happy days' ......


என்னோட college days முடியப்போகுது....5 வருஷம் எப்படி இவ்வளவு வேகமா போச்சுன்னு தெரியல.ஆனா ரொம்ப சந்தோஷமான நாட்கள.....இந்த பதிவு என்னோட கல்லூரி நாட்களோட flash back.....

முதல் வருஷம்....

சேர்ந்த புதுசுல முதல கொஞ்ச நாள் எங்கள engineering hostelஅ போட்டுயிருந்தாங்க...நிறைய குரங்கு வரும்.படியல்லாம் உட்கார்ந்துட்டிருக்கிற அதுங்ககிட்டயிருந்து தப்பிச்சு முதல் மாடிலயிருக்கும் என்னோட ரூம்க்கு வர்றது ஒரு nightmare............


எங்களோட physiology practicalsல நாங்க எங்களோட விரல்ல குத்தி எங்க ரத்ததுல தான் டெஸ்ட் பண்ணனும்....first classல எங்களுக்கல்லாம் ரொம்ப பயம்.கைல pricker வச்சிட்டு விரலயும் அதையும் மாத்தி மாத்தி பார்த்திட்டிருந்தோம்...என் பக்கதுல ஜனனி,என்னோட அடுத்த roll number....எனக்கு எதிர்ல ஒரு பையன்,எனக்கு முந்தின roll number...திடீர்னு அவன் ரொம்ப வேகமா அவன் விரல்ல குத்திக்கிட்டான்...நானும் ஜனனியும் அதிர்ச்சியாகி அவனையே பார்த்திட்டிருந்தோம்.அவன் கைலயிருந்து ரத்தம் வடிஞ்சிட்டிருந்தது.அவனும் பயந்து போயி திரு திருன்னு முழிச்சிட்டிருந்தான்....இத சொல்லி இன்னைக்கு வரைக்கும் அவன ஓட்டுவோம்..........


எங்க ரூம்ல நாங்க நாலு பேர்....இதுல ஒரு பொண்ணு mbbs...எங்களுக்கு அப்ப anatomy class dissection start பண்ணல ஆனா அவளுக்கு ஆரம்பிச்சிருந்தாங்க..எங்க ரெண்டு பேருக்கும் ஒரே cadavar....அவங்க பேர் குமுதவள்ளி....ஒரு நாள் நாங்க தூங்கிட்டிருந்தோம்...திடீர்னு அவ "அய்யோ குமுதவள்ளி பாட்டி போங்க...போங்க"ன்னு கத்த ஆரம்பிச்சுட்டா....நாங்க எல்லாரும் முழிச்சி எழுந்து உட்கார்ந்துட்டோம்....என்னோட இன்னொரு ரூம் மேட் 'ஜோ',அவகிட்ட"கவலை படாத..பயப்படாம தூங்கு...God is with us..."அப்படின்னு ரொம்ப ஆறுதல் படுத்தினாங்க மேடம்...அப்புறம் நாங்கள்லாம் திரும்ப படுத்திட்டோம்....திரும்ப "எனக்கு பயமாயிருக்கு...யாராவது என் பக்ககத்துல வந்து படுத்துக்கோங்க please"ன்னு ஒரு குரல்....யார்னு பார்த்தா, நம்ம God is with us 'jo'...


காலேஜ் சேர்ந்த 13வது நாள் ராத்திரி....நான் தூங்கிட்டிருந்தேன் ( நீ எப்பவுமே அது மட்டும் தான் பண்ணுவியான்னல்லாம் கேட்கப் படாது....)..யாரோ ரொம்ப நேரமா கதவ தட்டிட்டிருந்தாங்க....போய் திறந்தா,வெளில ஒரு கும்பல் கைல candle பிடிச்சுட்டு கேக்கோட b'day song பாடிட்டிருந்தாங்க....நான் பிறந்தநாள் கொண்டாட மாட்டேன்.ஆனா சேர்ந்த கொஞ்ச நாள்லயே இவ்வளவு அக்கறையா என் friends பண்ணது என்னால மறக்க முடியாது.... :)))........

இப்போதைக்கு இந்த மொக்கை போதும்...i'll be back with more as soon as possible..........

Monday, July 13, 2009

வாலு,சில குறிப்புகள்......- அபுவாலு


சின்ன வயதில்..
பேசவே மாட்டாய்..
சரியான சிடுமூஞ்சி
இது வேணும்னா இது தான் வேணும்..
அது சாப்பிட்டு முடித்த வாழைப்பழமாக இருந்தாலும்..

கொஞ்சம் அதட்ட முடியாது..
உடனே ஊரைக் கூட்டி விடுவாய்..
உன் சப்போர்ட்டுக்கு உறவுக்கார கெழங்கட்டைங்க அத்தனை பேரும்..
ஆசையா உன்னை திட்டக் கூட முடியாது..
சின்ன சனியனே என்று கொஞ்சும் குரலில் தான் திட்ட வேணும்..

அப்படிப்பட்ட நீ அயல்நாடு வந்தாய்..
அங்கேயும் அட்டூழியம்
நான் பாட்டி வீட்டுக்கு போறேன்..
என்னை உடனே அனுப்பு.. ஆ.. ஓ..

ஒரு நாள் ஒரு பழைய ப்ளைட் டிக்கெட் கிடைத்தது
அதை காண்பித்து சரி சரி நீ கிளம்பு
துணிகளை பேக் செய்து கொள்
என்று சொல்லிவிட்டு ஆபீஸ் போய் விட்டேன்..
ஆபீஸிலிருந்து போன் செய்து
என்ன கிளம்பி விட்டாயா என்று கேட்டதற்கு..
தம்பியும் கூட வரணும் என்றாய்..
தம்பியா அழறான்.. நீ தானே.. நீ மட்டும் கிளம்பு என்றேன்..
தம்பி வராட்டி நான் போக மாட்டேன் என்றாய்..

அன்று தான் உன் அன்பின் அளவை
எங்களுக்கு புரிய வைத்தாய்..
இன்றும் நீ தம்பியிடம் வம்பளக்கும் போதெல்லாம்
எனக்கு நன்றாகத் தெரியும் அது உண்மையிலேயே பொய் என்று..

மணிரத்னம் போல
நல்லா இருக்கியா.. இருக்கேன்..
படிச்சியா .. படிச்சேன்.
சுhப்பிட்டியா.. சாப்பிட்டேன்..
இப்படி இருந்த நீ..
ஒரு நாள் .. நல்லா இருக்கியான்னதற்கு
நான் நல்லா இருக்கேன் ... நீங்க நல்லா இருக்கிங்களான்னு கேட்டாய்..
அதைக் கேட்ட அந்த தருணம் கூட எனக்கு ஞாபகத்தில் உள்ளது..
அன்று முதல் இதோ நேற்று பேசும் போது கூட
நல்லா இருக்கீங்களான்னு கேட்டாய்..
நீ கேட்கும் போதெல்லாம் எனக்கு புத்துணர்ச்சி கிடைக்கத்தான் செய்கிறது..
உன்னைப் பெற்றதன் பலனை இறைவன் எங்களுக்கு
பாக்கியமாகவே தந்து விட்டான்..
என்றும் உன் நிழலாய் இருக்க இறைவன் எங்களுக்கும்
அருள் புரியட்டும்
வாழ்க்கையில் ஒவ்வொரு தருணமும் சந்தோசத் தருணமாகவே அமைய
அவனையே இறைஞ்சியவர்களாக..

அம்மா தம்பியும் இணைந்து பிரார்த்திக்கும் .. அபுவாலு..