
இன்னிக்கு எனக்கு ward posting.என் கூட ஜனனியும் சுகன்யாவும்.....காலைல 8.30 மணிக்கு wardல இருக்கனும்...break fast சாப்பிடாம அங்க போய் canteenல தயிர்வடை சாப்பிடலாம்கிற நினைப்புல கிளம்பிட்டேன்...இன்னைக்கு ward incharge dr.RR...
அங்கப்போய் நாங்க ஸெட்டிலான 15 நிமிஷத்துல எங்க batch பசங்க இரண்டு பேர் வந்து சேர்ந்தாங்க....இவங்கள உட்கார வச்சிட்டு நாம போய் தயிர் வடை சாப்பிடலாம்னு நினைச்சு முடிக்கறதுக்குள்ள அதுல ஒருத்தன் வந்து, நாங்க கொஞ்சம் வெளில போறோம், ஸார் கூப்பிட்டா call பண்றியான்னு கேட்டான்....நான் பசி,கோபம் எல்லாம் கலந்து அவன பார்க்க ஆள் எஸ்ஸாயிட்டான்.....
ஒரு 5 நிமிஷத்துக்கப்புறம் எங்கள கூப்பிட்டார் RR...ஒரு case sheet ஜனனிக்கிட்டயும் சுகன்யாகிட்டயும் கொடுத்து CT scan பண்ண பேஷன்ட பணம் கட்டி விட்டு கூட்டிட்டு போக சொன்னார்....என்கிட்ட ஒரு case sheet கொடுத்து பேஷன்ட ENT opinion வாங்க கூட்டிட்டு போக சொன்னார்...registration deskம் ENT departmentம் பக்கம்...அதனால நான் அவங்க ரெண்டு பேர் கிட்டயும் just 2 min வேலைதான் சீக்கிரம் வந்துடலாம்கிற நினைப்புல அவங்களுக்கு ஜாலியா டாடா காட்டிட்டு போனேன்.....
ENT department போய், அங்க பாவமா இருந்த ஒரு PG கிட்ட case sheetஅ நீட்டினேன்...(இதுவரைக்கும் எல்லாம் ஸ்மூத்தா தான் போச்சு....)அவர் case sheet பார்த்துட்டிருந்தார்.இந்த கேஸ் CA tongue ( cancer )....அவர் பக்கத்துலயிருந்த இன்னொரு PG திடீர்னு இவர்கிட்ட,ஏன்டா நம்ம OPல தான் radiotherapy இல்லயே பின்ன இந்த பேஷன்டுக்கு என்ன பண்ண போறாங்கன்னு கேட்டார்...( ஏன் இப்படி???உங்க GKவ வளர்க்க இதுவா நேரம்???) உடனே இவர் என்ன பார்த்தார்..(அட ஜீவன்களா....5 நிமிஷத்துக்கு முன்னாடி தான் இந்த case sheet என்கிட்ட வந்துச்சு...மத்த்ப்படி எனக்கு இதப்பத்தி எனக்கு வேற எதுவும் தெரியாது....)இன்னொரு PG உடனே,"what is the treatment plan for this case?" ( அடடா...ஆரம்பிச்சிடாய்ங்களே)...."இது ENT 2...ஆனா நீங்க போன தடவை ENT 1 கிட்ட opinion வாங்கியிருக்கீங்க.அதனால நாங்க இப்ப பாக்க மாட்டோம்....நீங்க ENT 1 தான் பாக்கனும்" ...."ஸார்...நான் எங்க department PGய வர சொல்றேன்..நீங்க அவர்கிட்ட கேளுங்க..இந்த கேஸ நான் handle பண்ணல",இது நான்.......
RR," அவங்க கிட்ட சொல்லு.ENT1 opinion வாங்கினது posterior extension of the lesionக்கு ENT2 opinion வாங்கினது hoarseness of voiceக்கு..." ( அய்யா...இத நீங்களே வந்து சொல்லிடலாமே....நான் என்ன messenger serviceஆ)...நான் இதயே ENT PGகிட்ட சொல்ல,அவர் உடனே எனக்கு தெரியாது நீங்க chiefஅ பாக்கனும்னு சொல்லிட்டார்...நான் மறுபடியும் RRக்கு கால் பண்ணி வர சொன்னேன்....அவர் வந்தவுடன்,அந்த ENT PG எங்க PGகிட்ட ஏதோ அவங்க என்கிட்ட எதுவுமே கேட்காத மாதிரியும்,நான் சும்மா 'ல்லுல்லாய்'க்கு அவர வர சொன்ன மாதிரியும் ஒரு பிட்ட போட்டாங்க...(அய்யா....ஏன்ய்யா இப்படி????பாவமா இருக்கற புள்ளைய இப்படியா பந்தாடறது????...)அப்புறம் எங்க PG என்னை மொறைக்க.....நான் அவரை மொறைக்க.."உன் வேலைய நீங்களே பார்த்திருந்தீங்கனா இவ்வளவு பிரச்சனை வந்திருக்குமா???ஏன் உங்க வேலைய என்கிட்ட கட்டிவிட்டு என்னை அலைய விட்டீங்க"ன்னு நல்லா கேட்டேன்.....(எல்லாம் மைன்ட் வாய்ஸ் தான்ப்பு......சத்தமா கேட்டா சும்மா விடுவாய்ங்களா......)
அப்புறம் நாங்க எங்க departmentக்கு வர canteenல் தயிர் வடை முடிந்தது என்ற முக்கிய செய்தி அதை சாப்பிட்டு முடித்துவிட்டு வந்தவர்கள் மூலம் என்னை வந்தடைய....OH.....எனக்கு மட்டும் ஏன் இப்படி?????
(இது நான் என்றோ எழுதியது.....draftsலிருந்து தூசு தட்டி இப்ப publish பண்றேன்....)
