Saturday, May 30, 2009

The taste of singapore......


நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்பத்துடன் ஒரு சுற்றுப்பயணம்.....இம்முறை சிங்கப்பூர்...உண்மையை சொல்லனும்னா எனக்கு சிங்கப்பூர் மேல அவ்வளவா ஈடுபாடு இருக்கவில்லை.அதுமட்டுமில்லாமல் இம்முறை leave எடுத்தால் extension வேறு கிடைக்கும் என்பதால் நான் ரொம்ப யோசிச்சு அப்புறம் தான் ஒத்துக்கிட்டேன் அதுவும் அரை மனதாய்......but the trip was simply superb.......

long long ago so long ago, ஒரு இளவரசன் கடல் பயணம் மேற்கொண்டானாம்.....அப்போ பலத்த காத்து வீசுனதுனால கப்பல் ஏதோ ஒரு தீவுல போய் கரை சேர்ந்திருக்கு..அங்க அவன் சிங்கத்த பார்த்ததால அந்த இடத்துக்கு சிங்கப்பூர்ன்னு் பேர் வ்ச்சானாம்......சிங்கப்பூர் ஒரு் சின்ன தீவு....முன்னாடி அது ஒரு மீன்பிடி கிராமமாதான் இருந்ததாம்...அந்த நினைவாதான் இந்த மீன் உடம்பும் சிங்கத்தலையும் கொண்ட இந்த merlion ( mermaid + lion ).........sir Raffles Stamford என்பவர் தான் அங்கு ஒரு துறைமுகத்த அமைச்சு அந்த குட்டி தீவை வளர்த்தவர்.....

சிங்கப்பூரில் அடிக்கடி மழை பெய்யும்.....ரோட்டில் மழை தண்ணி தேங்காதவாறு வடிவமைத்திருக்கிறார்கள்....humidity ரொம்ப ஜாஸ்தி.அதனால அங்க இருக்கறவங்க அதை சமாளிக்க அடிக்கடி ஏதாவது குடிச்சுட்டே இருக்காங்க....அப்புறம் அங்க தமிழும் official language  என்பதால் எல்லா அறிவிப்பு பலகையிலும் தமிழும் இடம்பெற்றிருக்கும்.......அங்கு எனக்கு ரொம்ப பிடிச்சது 99% pollution free தன்மை அப்புறம் அந்த ஊர் MRT (mass rapid transport) எனப்படும் ரயில்கள்........அங்கு அதிகமான மக்கள் அவற்றை தான் உபயோகிக்கிறார்கள்...இதனை அரசாங்கமும் ஊக்குவிக்கி்றது.இதனால் ட்ராஃபிக்கும் கம்மி....துபாயும் இதனால் தான் அதன் விழி பிதுங்கும் ட்ராபிக்கை சமாளிக்க metro ரயில் அறிமுகப்படுத்துகிறது.......
CBD (central business district) தவிர மற்ற இடங்கள் அதிகமாக residential areasதான்......ஆங்காங்கே community centres உண்டு.பல உருப்படியானவற்றை அங்கு கற்றுக் கொடுக்கிறார்கள்.. avenueக்கு avenue senior citizensகான exercising area உண்டு.....அங்கு 85% மக்கள் அரசு கட்டி விக்கும் housing boardல் தான் வசிக்கிறார்கள்....private housing விலை அதிகம்...

இது MICA (Ministry of Culture and Arts) building......இங்கே 911 ஜன்னல்கள் உள்ளன..முன்னொரு காலத்தில் இது போலீஸ் ஸ்டேசனாக இருந்ததாம்.அப்ப  எல்லா ஜன்னல்களையும் திறந்து் மூடுவதற்காகவே ஒரு ஆளை வேலைக்கு வச்சிருப்பாங்களாம்........
இது esplanade building......பொதுவா durian buildng...ஏன்னா இது பார்க்க துரியன் பழம் போல் இருக்கும்..இதுல 7 ஆயிரத்துக்கும் அதிகமான அலுமினிய தகடுகள் பொருத்தியிருக்காங்க....இது அவங்க ஊர் opera house......
இது singapore flyer ( world's largest observatin wheel).....178 feet tall....ஒவ்வொரு கேப்ஸுல்லையும் max 27 பேர் உட்காரலாம்...முழுவதும் ஒரு சுற்று முடிக்க 37 நிமிடமாகுது...நாம கேப்ஸூல்குள்ள போறதுக்கு முன்னாடி நம்ம கிட்ட head phone கொடுத்துடுவாங்க...நாம பார்க்கற இடங்கள பத்தி அதுல விளக்கமா சொல்லிட்டே இருப்பாங்க..பக்கத்து தீவுகளான மலேசியாவையும் இந்தோனேசியாவையும் கூட பார்க்கலாம்...... 

இது little India....இது இந்தியர்கள் அதிகம் கூடும் இடம்...இந்தியக் கடைகளும் இங்கு அதிகம்...மூன்று கோவில்களும் உண்டு...mustafa centre ( the only 24hr shopping complex in singapore ) இங்கு தான் உள்ளது.அங்கே வேலை பார்ப்பவர்கள் 95% தமிழர்கள்.....


இது thieves market......முன்னாடி அங்க இங்க ஆட்டய போட்டதையெல்லாம் இங்க தான் விப்பாங்களாம்...

(தொடரும் )