
( இது slumdog millionare பார்த்த பாதிப்பு........அந்த படம் மாதிரியே, காட்சிகள் மாறி மாறி வரும்......)
இருட்டு அறைக்குள் உட்கார்ந்திருந்தான் கோல்மால்......அவன் அருகில் ஒரு DCI ( dental council of india) inspector அவனையே முறைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார்....விஷயம் இதுதான்,கோல்மால் ஒரு உடான்ஸ் காலேஜில் படிப்பவன்.அந்த காலேஜில் யாருமே உருப்படியாக படிக்கமாட்டார்கள்.classக்கும் வர மாட்டார்கள்......exam vivaவில் கேட்கவே வேண்டாம், யாருமே வாயைத் திறக்க மாட்டார்கள்.இது தான் முந்தாநாள் வரை இருந்த நிலவரம்.........ஆனால் நேற்று final year viva attend பண்ணிய கோல்மால் எல்லா கேள்விகளுக்குமே பதில் அளித்தான்......இதனால் எங்கேயோ தப்பு நடந்திருக்கென சந்தேகப்பட்ட examiners, vivaவை நிறுத்தி விட்டு அவனை DCI விசாரனைக்கு அனுப்பி வைத்தனர்......
அவனிடம் vivaவில் கேட்கப்பட்ட முதல் கேள்வி,
EXAMINER : which teeth gets most commonly affected in traumas?
கோல்மால் : (உடனடியாக) incisors are the teeth most commonly affected.......
DCI inspector அவனிடம், "சொல்லுடா.....எப்படி answer பண்ணின???உன்ன பார்த்தா சத்தியமா படிக்கறவன் மாதிரி தெரியல.....பின்ன எப்படிடா???"
flash back.........(கொசுவர்த்தி சுத்திக் கோங்க பாஸு..........)
hostelல்ல சீனியர்ஸ்க்கும் இவங்க batchக்கும் சண்டை.....அந்த சமயத்தில் கையில் pepsi 'my can'னுடன் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த இவனிடமிருந்து ஒரு சீனியர் அதை பிடுங்கிக்கொள்ள, இவன் முறைக்கிறான்......உடனே சீனியர் "என்னடா முறைப்பு???ஓங்கி உட்டேன்னா முன்னாடி பல்லு தெறிச்சி விழுந்துறும்........ஓடிப்போயிடு...."
இவன் தலைத் தெறிக்க ஓடி விடுகிறான்............
"இப்படிதான் சார், நான் அந்த questionக்கு answer பண்ணிணேன்....... " என்றான் கோல்மால். ஆச்சரியமாக அவனையே பார்த்துக்கொண்டிருந்தார் DCI inspector........"சரிடா......ரெண்டாவது questionக்கு எப்படி???"
second question,
EXAMINER : what is the shape of the posterior palatal seal area ???
கோல்மால் : cupid bow shape.......
flash back......(கொசுவர்த்தி please......)
கோல்மால் நடந்து போய்க்கொன்டிருந்தான்.திடீரென அங்கு வந்த அவன் batchmate,"டேய் மாப்ள, ஒரு helpடா please.......இத அந்த டிமிக்கி பொண்ணுட்ட கொடுத்துடேன் மச்சான்...."
"என்னாடா இது???", கோல்மால்........
"இல்லடா......எனக்கு டிமிக்கிமேல ஒரு இதுடா......அதான் லவ் லெட்டர் எழுதுனேன்...."
" அது சரிடா.......இது என்னா எதையோ ஒட்டி வச்சுருக்க??? "
"அதுவா......நான் prostho புக்க பக்கத்துல வச்சுட்டு லெட்டர் எழுதிட்டிருந்தேனா.......திடீர்னு இது கண்ணுல பட்டுச்சு.......நம்ம valentines day cardல இருக்க cupid bow மாதிரியே இருந்துச்சா,அதான் எடுத்து ஒட்டிட்டேன்.....எதோ posterior palatal seal area ன்னு போட்டிருந்துச்சு,நமக்கெதுக்கு பேரெல்லாம்......."
வாய் பிளந்துப் பார்த்துக்கொன்டிருந்தார் DCI inspector......."உன்ன பார்த்தா மார்க் வாங்க ஆசைப்பட்டு answer பண்ணுன மாதிரி தெரியல........பின்ன ஏன் answer பண்ண???"
" அதுக்குக் காரணம் நித்திகா......"
" என்னது???"
" நித்திகா........நாங்க எப்பவும் எங்க காலேஜ் பக்கத்துல இருக்க பொட்டி கடைல தான் தம் அடிப்போம்......அங்க இருக்க பொண்ணுதான் நித்திகா.....எனக்கு அவள ரொம்ப பிடிக்கும்......ஆனா அவங்க அப்பா,நீ பாஸ் பண்ணாதான் என் பொண்ணுனு சொல்லிட்டார்........அந்த வேகத்துல தான் answer பண்ணேன்..."
" சரி........நீ எந்த தப்பும் பண்ணலன்னு தெரியுது.......போ...போய் last question answer பண்ணி பாஸாகு......."
EXAMINER : this is your last question.......how many line angles and point angles are there in a class 11 cavity preparation??
கோல்மால் : ஐயோ......எனக்கு தெரியலயே!!!!
EXAMINER : இவ்வளவு நேரம் நல்லா answer பண்ணிட்டு, இப்ப இப்படி சொன்னா.....எங்களுக்கே கஷ்டமா இருக்கே........சரி,உன் friend யாருக்காவது call பண்ணி கேட்டு சொல்லு.......
கோல்மால் : நான் இங்க mobile எடுத்துட்டு வரலயே.......
EXAMINER : சரி,இந்தா என்னோடது......
கோல்மால் : (ஓசி call செய்யும் மகிழ்ச்சியில்.....நித்திகாவிற்கு phone செய்கிறான்.......)ஹலோ நித்தி........நான் கோல்மால் பேசறேன்......ஏன் அங்க ஒரே சத்தமா இருக்கு????
மறுமுனையில், " ஹலோ......யாரு கோல்மாலா??? இப்பதான் எனக்கு கல்யாணம் முடிஞ்சுது.....இன்னும் மண்டபத்துல தான் இருக்கோம்.....நீ வந்தா நிறைய மொய் வப்பேன்னு நினைச்சேன்......கஞ்ச பய, கடைசி வரைக்கும் வரலயே.........இப்ப நீ......ஹலோ.......ஹலோ........ஹலோ....என்ன சத்ததையே காணும்???? "
இங்கே மயக்கம் போட்டிருந்தான் கோல்மால்..............
[trauma - accidents
incisors - முன் பற்கள்
posterior palatal seal area - பல் செட்டு போட மிகவும் உபயோகப் படும், வாயின் ஒரு பகுதி
cupid bow- கிட்டதட்ட மன்மதனின் வில்லைப் போல்
line angles and point angles - they are present in prapared cavities
class 11 cavities - பல் அடைக்கும் போது மருத்துவர் பல்லில் உருவாக்குவது...]


