Saturday, August 15, 2009

சுதந்திர தினமும் சுதந்திரமும்.....


சின்னி ஒரு மூன்று வயது குழந்தை.....
அன்று அம்மாவும் அப்பாவும் வீட்டில்
ஏதோ விடுமுறையாம்.....
சிரிப்பே உருவாய் எழுந்தான் குழந்தை......
அம்மாவோடு தொங்கினான்
டயர்டாயிருக்கு அப்பாவிடம் போ என்றார் அம்மா.....
அப்பா வாக்கிங் போலாமா என்றவனிடம்
ஸ்பெஷல் நியூஸ் அப்புறம் போலாம் என்றார் அப்பா....
தானே பொம்மையோடு விளையாடினான்
சத்தம் போடாதே டீவி பார்க்கனும் என்றனர் இருவரும்....
வெளியில் போகவா என்றால்
பைக் வரும் கார் வரும் வெயிலும் அடிக்கும் அதனால் போகாதே.....
வேறு வழியின்றி உள்ளேயே அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்த
அவனையும் அவன் பொம்மைகளையும் அறையில் அடைத்து விட்டு
மூழ்கினர் இருவரும் சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியில்....
அறையிலிருந்த பொக்கைவாய் காந்தி பொம்மையை
நக்கலாய் பார்த்து உன்னையும் அடைச்சுட்டாங்களா என்றது குழந்தை.....

13 comments:

அ.மு.செய்யது said...

நிதர்சனம்.கூண்டுக்குள் அடைபட்ட சுதந்திரம்.நல்ல கவிதை !!!

அபுஅஃப்ஸர் said...

ரியாலிட்டியா சொல்லிருக்கீங்க உங்க வரிகளில்

எது சுதந்திரம்?

omer said...

குழந்தையே..
நீ வெளியுலகம் தெரியாமல் பேசுகிறாய்..
நீ மட்டுமா அடைபட்டுள்ளாய்..

நம் முதற்குடிமகன்.. பிரதமர் என
அனைவருமே குண்டு துளைக்க முடியாத
கண்ணாடிக் கூண்டுக்குள் அடைபட்டுத் தான்
சுதந்திர தின வாழ்த்தையே சொல்ல முடிகிறது..

ஜியா said...

ஐடியாவும் கவிதையும் நல்லா இருக்குது... கொஞ்சம் வரிகள கொறச்சிருந்தா இன்னும் சிறப்பா இருந்திருக்கும் :))

anbudan vaalu said...

@அ.மு.செய்யது

நன்றி sayed....


@அபுஅஃப்ஸர்

நன்றி அபுஅஃப்ஸர்...சுதந்திரம் இருந்தும் இல்லாமலிருக்கும் நம் மக்கள் பலரின் நிலையை சொல்ல விரும்பினேன்...

@omer

அத்தா... நீங்க சொல்றதும் வாஸ்தவம் தான்... :)))

@ஜியா

நன்றி ஜி...
ஓ அப்படியா..அடுத்த தடவை சரி பண்ணிடலாம்...

பிரியமுடன்.........வசந்த் said...

உண்மை நிலையை அப்படியே சொன்னதுக்கு பாராட்டுக்கள்

ஜெய்ஹிந்த்

நட்புடன் ஜமால் said...

சுதந்திர தின நல் வாழ்த்துகள்.


-----------------

உங்கள் வரிகள் நிதர்சனம்.

கிடைத்த சுதந்திரத்தை முழுவதாக
அனுபவிக்க மீண்டும் ஒரு சுதந்திரம் வேண்டும் ...

anbudan vaalu said...

@பிரியமுடன்.........வசந்த்

நன்றி வசந்த்....வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....

@நட்புடன் ஜமால்

நன்றி காக்கா...நீங்கள் சொல்வதும் நிதர்சனமே....

கலாட்டா அம்மணி said...

இன்னைக்கு பலபேர் வீட்டில இதுதான் நடக்குது...பிள்ளைங்கள இயல்பாவே இருக்க விடுவதில்லை..

நல்ல பதிவு..வாழ்த்துக்கள் வாலு..

MAHA said...

சுதந்திர தின நல் வாழ்த்துகள்.

MAHA said...

அருமையான அர்த்தமுள்ள கவிதை.

anbudan vaalu said...

@கலாட்டா அம்மணி

நன்றிங்க அம்மணி...

@maha

நன்றி மகா...

இய‌ற்கை said...

நிதர்சன வரிகள்