என்னோட college days முடியப்போகுது....5 வருஷம் எப்படி இவ்வளவு வேகமா போச்சுன்னு தெரியல.ஆனா ரொம்ப சந்தோஷமான நாட்கள.....இந்த பதிவு என்னோட கல்லூரி நாட்களோட flash back.....
முதல் வருஷம்....
சேர்ந்த புதுசுல முதல கொஞ்ச நாள் எங்கள engineering hostelஅ போட்டுயிருந்தாங்க...நிறைய குரங்கு வரும்.படியல்லாம் உட்கார்ந்துட்டிருக்கிற அதுங்ககிட்டயிருந்து தப்பிச்சு முதல் மாடிலயிருக்கும் என்னோட ரூம்க்கு வர்றது ஒரு nightmare............
எங்களோட physiology practicalsல நாங்க எங்களோட விரல்ல குத்தி எங்க ரத்ததுல தான் டெஸ்ட் பண்ணனும்....first classல எங்களுக்கல்லாம் ரொம்ப பயம்.கைல pricker வச்சிட்டு விரலயும் அதையும் மாத்தி மாத்தி பார்த்திட்டிருந்தோம்...என் பக்கதுல ஜனனி,என்னோட அடுத்த roll number....எனக்கு எதிர்ல ஒரு பையன்,எனக்கு முந்தின roll number...திடீர்னு அவன் ரொம்ப வேகமா அவன் விரல்ல குத்திக்கிட்டான்...நானும் ஜனனியும் அதிர்ச்சியாகி அவனையே பார்த்திட்டிருந்தோம்.அவன் கைலயிருந்து ரத்தம் வடிஞ்சிட்டிருந்தது.அவனும் பயந்து போயி திரு திருன்னு முழிச்சிட்டிருந்தான்....இத சொல்லி இன்னைக்கு வரைக்கும் அவன ஓட்டுவோம்..........
எங்க ரூம்ல நாங்க நாலு பேர்....இதுல ஒரு பொண்ணு mbbs...எங்களுக்கு அப்ப anatomy class dissection start பண்ணல ஆனா அவளுக்கு ஆரம்பிச்சிருந்தாங்க..எங்க ரெண்டு பேருக்கும் ஒரே cadavar....அவங்க பேர் குமுதவள்ளி....ஒரு நாள் நாங்க தூங்கிட்டிருந்தோம்...திடீர்னு அவ "அய்யோ குமுதவள்ளி பாட்டி போங்க...போங்க"ன்னு கத்த ஆரம்பிச்சுட்டா....நாங்க எல்லாரும் முழிச்சி எழுந்து உட்கார்ந்துட்டோம்....என்னோட இன்னொரு ரூம் மேட் 'ஜோ',அவகிட்ட"கவலை படாத..பயப்படாம தூங்கு...God is with us..."அப்படின்னு ரொம்ப ஆறுதல் படுத்தினாங்க மேடம்...அப்புறம் நாங்கள்லாம் திரும்ப படுத்திட்டோம்....திரும்ப "எனக்கு பயமாயிருக்கு...யாராவது என் பக்ககத்துல வந்து படுத்துக்கோங்க please"ன்னு ஒரு குரல்....யார்னு பார்த்தா, நம்ம God is with us 'jo'...
காலேஜ் சேர்ந்த 13வது நாள் ராத்திரி....நான் தூங்கிட்டிருந்தேன் ( நீ எப்பவுமே அது மட்டும் தான் பண்ணுவியான்னல்லாம் கேட்கப் படாது....)..யாரோ ரொம்ப நேரமா கதவ தட்டிட்டிருந்தாங்க....போய் திறந்தா,வெளில ஒரு கும்பல் கைல candle பிடிச்சுட்டு கேக்கோட b'day song பாடிட்டிருந்தாங்க....நான் பிறந்தநாள் கொண்டாட மாட்டேன்.ஆனா சேர்ந்த கொஞ்ச நாள்லயே இவ்வளவு அக்கறையா என் friends பண்ணது என்னால மறக்க முடியாது.... :)))........
இப்போதைக்கு இந்த மொக்கை போதும்...i'll be back with more as soon as possible..........

9 comments:
ஐ..கனாக்கானும் காலங்கள்....
வாழ்நாளில் திரும்ப பெற முடியாத அற்புத நினைவுகள்..
நல்ல பகிர்வு !!
நன்றி sayed... :)))
வாழ்க்கையின் முக்கிய தருணங்கள்
உண்மை தான்
சந்தோஷ தினங்கள் - தினம் தினம்
romba nalla iruku...write sooon abt 2nd 3rd 4th nd abt internship also...waitin 4 it
//http://www.anbudanvaalu.com//
domainlaam vaangitteenga pola... vaazththukkal
ஹாய் வாலு..
college days முடிஞ்சுபோச்சேனு ரொம்ப வருத்தமாதான் இருக்கு..
இப்பதான் first year join பண்ணமாதிரி இருக்கு,அஞ்சு வருஷம் ஓடியே போச்சு...
ஔநன்றி அபுஅஃப்ஸர்,ஜமால் காக்கா....
thanx siva...will post as soon as possible.....
thanx gee....the domain was my friend's b'day gift for me.... :))
அம்மணி...காலம் ரொம்ப வேகமா ஓடுது.....
பயந்து கொண்டே கதவ திறந்ததும் ஒரு கும்பல் கேன்டிலோட ஹாப்பி பர்த்டே பாடினா ஆஹா நினைத்து பார்க்கவே நல்ல இருக்கு.
இனிமையான நாட்கள் இல்லையா?
Post a Comment