
என் பொண்ணுக்கு பூவென்றால் அலர்ஜி..
மனைவிக்கோ பூ பொன்னான மலர்..
ஒரு முறை காரில் பிரயாணம்..
வலது பக்கம் மனைவி தலையில் பூவுடன்..
இடது பக்கம் மகள்..
கார் பெட்ரோல் போட நின்ற போது
ஒரு வயதான பாட்டி பூ விற்றபடி
அதுவும் இடது பக்க கதவின் அருகில்..
பூ வேண்டாம் பாட்டி..என்றேன்..
காருக்காவது வாங்கி வையுங்க...என்றது பாட்டி
காரில் வச்சா அதுவும் சேர்த்து மணக்கும்..
இந்தப் பதிவின் முதல் வரி ஞாபகத்துக்கு வர
செய்வதறியாமல் திகைத்த கணம்..
மகள் தன் பையிலிருந்து
பணம் எடுத்தார்..
மனைவிக்கு சந்தோசம்.. அப்பாடா மகள் பூ வாங்கப் போகிறாள்..
எனக்கோ தர்ம சங்கடம்..அடடா நாமே வாங்கியிருக்கலாமோ என..
பாட்டியிடம் பணம் கொடுக்க..
பாட்டி பூவை அளக்க..
பூ வேணாம் பாட்டி.. நீங்க வச்சிக்குங்க என்றார் மகள்..
பிள்ளைகளுக்கு நாம் வாழ கற்றுக் கொடுக்கிறோம்..
பிள்ளைகளோ வாழ்க்கைன்னா என்னன்னு
நமக்கு கற்றுக் கொடுக்கிறார்கள்..
அபுவாலு

7 comments:
பிள்ளைகளுக்கு நாம் வாழ கற்றுக் கொடுக்கிறோம்..
பிள்ளைகளோ வாழ்க்கைன்னா என்னன்னு
நமக்கு கற்றுக் கொடுக்கிறார்கள்..
]]
சரியாக புரிந்து வைத்திருக்கின்றார் அபு.
குழந்தையின் அந்னோயத்தை ரசித்தேன்
பூ வென்றால் அலர்ஜியா நம்பமுடியவில்லை
அழகா சொல்லிருக்கீங்க அபுவால்
ஏற்கெனவே படித்து விட்டாலும் மீண்டும் படித்து புத்துணர்வு பெற முடிந்தது.
''சரியாக புரிந்து வைத்திருக்கின்றார் அபு''
வாழ்வியலில் புரிதல் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று.. அது நம் இம்மை வாழ்வுக்கும் மறுமை வாழ்வுக்கும் நிம்மதிப் பாதையாக அமையும்..
புரிந்து வைத்திருப்பதை புரிந்து கொண்டமைக்கு நன்றி..
//பூ வென்றால் அலர்ஜியா நம்பமுடியவில்லை//
அதிசயம் ..ஆனால் உண்மை.. இதென்ன எங்கள் குடும்பத்திலேயே மூன்று பேர் இருக்கிறார்கள்.. இன்னொரு கொசுறுக் கொடுமை அந்த மூன்றில் ஒருவரின் பெயர்.. ஜாஸ்மின்..
//அழகா சொல்லிருக்கீங்க அபுவால்//
பாராட்டுவதற்கும் ஒரு மனசு வேண்டும்.. தங்கள் அழகிய பாராட்டுக்கு நன்றி..
//மீண்டும் படித்து புத்துணர்வு பெற முடிந்தது//
கனவு காணுங்கள் என்று கலாம் சொன்னார்.. நானும் கனவு கண்டேன்.. சிந்திக்கக் கூடிய விதத்தில் மாணவர்கள் உருவாக வேண்டும் என.. இதோ உருவாகி விட்டார்கள் என்பது உறுதியாகிவிட்டது..
புத்துணர்வு பெற புரிதல் வேண்டும் புரிந்து கொள்பவர்கள் நாளையை நன்மையாக்கக் கூடியவர்கள்..
நாளைய சமுதாயத்துக்கு நல்ல வழிகாட்டிகள் உருவாகி விட்டார்கள்.. இறைவனுக்கே எல்லாப் புகழும்..
போன பதிவுலேயே இந்த கவிதைய பாத்தேன்.. ரொம்ப நல்லா இருந்தது... அதுவும் கடைசி வரி நச்.. :))
Post a Comment