Monday, July 13, 2009

வாலு,சில குறிப்புகள்......- அபுவாலு


சின்ன வயதில்..
பேசவே மாட்டாய்..
சரியான சிடுமூஞ்சி
இது வேணும்னா இது தான் வேணும்..
அது சாப்பிட்டு முடித்த வாழைப்பழமாக இருந்தாலும்..

கொஞ்சம் அதட்ட முடியாது..
உடனே ஊரைக் கூட்டி விடுவாய்..
உன் சப்போர்ட்டுக்கு உறவுக்கார கெழங்கட்டைங்க அத்தனை பேரும்..
ஆசையா உன்னை திட்டக் கூட முடியாது..
சின்ன சனியனே என்று கொஞ்சும் குரலில் தான் திட்ட வேணும்..

அப்படிப்பட்ட நீ அயல்நாடு வந்தாய்..
அங்கேயும் அட்டூழியம்
நான் பாட்டி வீட்டுக்கு போறேன்..
என்னை உடனே அனுப்பு.. ஆ.. ஓ..

ஒரு நாள் ஒரு பழைய ப்ளைட் டிக்கெட் கிடைத்தது
அதை காண்பித்து சரி சரி நீ கிளம்பு
துணிகளை பேக் செய்து கொள்
என்று சொல்லிவிட்டு ஆபீஸ் போய் விட்டேன்..
ஆபீஸிலிருந்து போன் செய்து
என்ன கிளம்பி விட்டாயா என்று கேட்டதற்கு..
தம்பியும் கூட வரணும் என்றாய்..
தம்பியா அழறான்.. நீ தானே.. நீ மட்டும் கிளம்பு என்றேன்..
தம்பி வராட்டி நான் போக மாட்டேன் என்றாய்..

அன்று தான் உன் அன்பின் அளவை
எங்களுக்கு புரிய வைத்தாய்..
இன்றும் நீ தம்பியிடம் வம்பளக்கும் போதெல்லாம்
எனக்கு நன்றாகத் தெரியும் அது உண்மையிலேயே பொய் என்று..

மணிரத்னம் போல
நல்லா இருக்கியா.. இருக்கேன்..
படிச்சியா .. படிச்சேன்.
சுhப்பிட்டியா.. சாப்பிட்டேன்..
இப்படி இருந்த நீ..
ஒரு நாள் .. நல்லா இருக்கியான்னதற்கு
நான் நல்லா இருக்கேன் ... நீங்க நல்லா இருக்கிங்களான்னு கேட்டாய்..
அதைக் கேட்ட அந்த தருணம் கூட எனக்கு ஞாபகத்தில் உள்ளது..
அன்று முதல் இதோ நேற்று பேசும் போது கூட
நல்லா இருக்கீங்களான்னு கேட்டாய்..
நீ கேட்கும் போதெல்லாம் எனக்கு புத்துணர்ச்சி கிடைக்கத்தான் செய்கிறது..
உன்னைப் பெற்றதன் பலனை இறைவன் எங்களுக்கு
பாக்கியமாகவே தந்து விட்டான்..
என்றும் உன் நிழலாய் இருக்க இறைவன் எங்களுக்கும்
அருள் புரியட்டும்
வாழ்க்கையில் ஒவ்வொரு தருணமும் சந்தோசத் தருணமாகவே அமைய
அவனையே இறைஞ்சியவர்களாக..

அம்மா தம்பியும் இணைந்து பிரார்த்திக்கும் .. அபுவாலு..


6 comments:

அபுஅஃப்ஸர் said...

ரசித்தேன்...

நானும் வேண்டிக்கொள்கிறேன்

அ.மு.செய்யது said...

வரிகளில் கொட்டி கிடக்கிறது பாசமும் யதார்த்தமும்.

//ஒரு நாள் .. நல்லா இருக்கியான்னதற்கு
நான் நல்லா இருக்கேன் ... நீங்க நல்லா இருக்கிங்களான்னு கேட்டாய்..//

இந்த அற்புத‌ தான் ஒவ்வொரு பெற்றோரும் தன் பிள்ளைகளிடம் எதிர்பார்க்கும் தருணம்.

நான் இதுவரை படித்த கவிதைகளிலே,இது கொஞ்சம் வித்தியாசமான உணர்வை ஏற்படுத்தி விட்டது.

நல்லா எழுதியிருக்காங்க....

அ.மு.செய்யது said...

இதற்கு நீங்க‌ ஒரு பதில் கவுஜ எழுதலாமே !!!!

anbudan vaalu said...

நன்றி அபுஅஃப்ஸர்....

நன்றி sayed....எழுதலாம் தான்.inshallah....

ஜியா said...

:)) Total familyeye ezuthalar kudumbamthaan pola....

anbudan vaalu said...

@ஜியா

:)))