Monday, June 8, 2009

the taste of singapore 2

அங்க ஒரு விஷயம் என்னான்னா இந்த மாதிரி bird park, zoo எல்லாத்தையுமே இயற்கையா ஒரு காடு எப்படி இருக்குமோ அப்படியே maintain பண்றாங்க....நமக்கும் ஒரு காட்டுக்குள்ளே போற feel கி்டைக்குது...கையில map வச்சிட்டு நாம ஜாலியா நடந்து சுத்தி பாக்கலாம் (கால் லைட்டா வலிக்கும்...ஆனா அதல்லாம் பார்த்தா enjoy பண்ண முடியாதே...singaporeலேர்ந்து வந்து இரண்டு நாளுக்கு அப்புறம் தான் கால் வீக்கம் எனக்கு போச்சு)........உள்ள tram இருக்கும்.அதிலயும் பயணி்க்கலாம்.ஆனா அதில மேலோட்டமாதான் பார்க்க முடியும்.........எல்லா இடங்களிலும் interactive shows செய்கிறார்கள்..மிருகங்கள் நம் பக்கத்துலேர்ந்து வெளிப்பட்டு போறது த்ரில்லாயிருக்கும்.....இந்த மிருகங்களுக்காக நாம காடுகள பாதுகாக்கனும்னு தோனும்......

Jurong bird park.....நிறைய species of birds இங்க உண்டு....walk in aviaries உண்டு.....feeding time சமயம் நாமும் உணவூட்டலாம்.....

walk in aviaries
parrots....

flamingoes......

majesticஆ ஒரு லுக்.....




night safari.....the most thrilling of all.....ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்துச்சு...காட்டு வாசி டான்சும் பார்த்தோம்...சிங்கம், மான்,சிறுத்தையெல்லாம் இருட்டுல பக்கத்துல பாக்க த்ரில்லா இருந்துச்சு.....அந்த சிறுத்தை கண்ணாடி தடுப்புக்கு பிண்ணாடி உறுமிட்டு இருந்துச்சு.அது பக்கத்துல முகத்த வச்சி் பார்த்தப்போ உள்ளுக்குள்ள அவ்வளவு பயம்........( ஆக்சுவலா அப்ப 'கண்கள் இரண்டால்' பாட்டு BGMல ஒலிச்சு்ருக்கனும்....மிஸ்ஸாயிடுச்சு...)
 
zooல இருந்த வெள்ளை புலியோட பேரு உமராம்.....அதனால என் தம்பி்யோட அளப்பறை தாங்க முடியல.....





Sentosa island.....இது ஒரு செயற்கை தீவு...ரோடு வழியாவும் போகலாம் cable carலேயும் போகலாம்.....underwater world அங்க இருக்கு...அதாவது தண்ணிக்குள்ள ட்யூப் போட்டிருப்பாங்க...நாம அதுக்குள்ள நடந்து கடல் வாழ் உயிரிணங்கள பார்க்கலாம்......beach, dolphin show, laser show, 3D show, 3D rides, luge ride இப்படி பல entertainment விஷயங்கள் நிறைஞ்ச தீவு.....

cable carல போறப்போ காட்டுக்குள்ள இந்த வீட பார்த்தேன்......


sea horse மாதிரி ஓன்னு.....ஒரு வேள ஒன்னு விட்ட கஸினோ???

sea dragon.....


jelly fish.....


tas n snake.......... 

my bro.......



அந்த ஊர் சாப்பாட்டை பத்தி நான் சொல்லவேயில்லையே........little Indiaலயும் மத்த இடங்கள்லயும் இந்திய உணவுகள் கிடைக்கும்தான், ஆனால் எந்த ஊருக்கு போறமோ அந்த ஊர் பாரம்பரிய உணவுகளை சாப்பிட்டாதான் பயணத்தை முழுமையா அனுபவிச்ச மாதிரி......அங்க நிறைய sea foods கிடைக்கும்.அதைதான் அந்த மக்களும் விரும்பி சாப்பிடுகின்றனர்....அதையும் சீனர்கள் chop stickல் சாப்பிடும் அழகே தனி...அத மாதிரி சாப்பிட try பண்ணா வாய்க்குள்ள வெறும் chop stick மட்டும் தான் போய்டு போய்டு வந்தது,சாப்பாடு போகல......mee goring ன்னு ஒரு noodles dish அதுல sea foods சேர்த்து அருமையா இருந்தது....அத மாதிரி அங்க துரியன் பழமும் பிரசித்தம்.ஆனா அதோட வாசனை பயங்கரமா இருக்கும்.அதனாலயே அந்த பழத்தை பஸ்லயோ இரயில்லயோ எடுத்துட்டு போக கூடாது.......

 
சிங்கப்பூர்ல இன்னொரு noticable thing என்னன்னா மலாய்,சீனர், இந்தியர் எல்லோரும் எந்தவொரு வேறுபாடும் இல்லாம பழகுறது...அருமையான சமத்துவம்......


இப்படி எங்களோட ஒரு வாரம் பயணம் ரொம்ப ஜாலியா போச்சு.....இங்க இன்னொரு வி்ஷயம் கண்டிப்பா சொல்லனும்.....எங்களை air portலேர்ந்து கூட்டிட்டு போனதுலேர்ந்து ஒரு வாரமும் எங்கள நல்லா கவணிச்சு திரும்ப air portல விடற வரைக்கும் excellent hospitality provide பண்ண Rafik அங்கிள்..ஸாரி ஸாரி அங்கிள் சொன்னா கோச்சுப்பார்.....Rafik annan family.......அதுவும் அவங்க வீட்டு வாண்டுங்க so sweet.....அந்த குட்டீஸை விட்டு வர்றது ரொம்ப கஷ்டமா இருந்தது :((........அப்புறம் kafur atha family, mami family  எல்லோருக்கும் ரொம்ப ரொம்ப thanks......... :))) 

nadhira, tas n erina........  



nadhira, tas n afnan



erina..........


12 comments:

அ.மு.செய்யது said...

அந்த கடைசி போட்டோக்கு முன்னாடி இருக்கறது தான் நீங்களா ??

இல்ல கையில் தர்பூசணி வச்சிருக்கறது தான் நீங்களா ??

அ.மு.செய்யது said...

//cable carல போறப்போ காட்டுக்குள்ள இந்த வீட பார்த்தேன்......//

உங்களோட கலைக்கண் வியக்க வைக்கிறது.

anbudan vaalu said...

தர்பூசணி வச்சிருக்கற ஜீவன் ப்லாக் எழுதும்னு நீங்க நம்பினீங்கன்னா..சந்தேகமே இல்லாம அது நான் தான்...

திகழ்மிளிர் said...

/அ.மு.செய்யது said...

அந்த கடைசி போட்டோக்கு முன்னாடி இருக்கறது தான் நீங்களா ??

இல்ல கையில் தர்பூசணி வச்சிருக்கறது தான் நீங்களா ??/

ரொம்ப தான் குறும்பு

/anbudan vaalu said...

தர்பூசணி வச்சிருக்கற ஜீவன் ப்லாக் எழுதும்னு நீங்க நம்பினீங்கன்னா..சந்தேகமே இல்லாம அது நான் தான்.../

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

anbudan vaalu said...

@அ.மு.செய்யது

\\உங்களோட கலைக்கண் வியக்க வைக்கிறது.\\

ரொம்ப நன்றி பாஸ்....ஆனா என்ன வச்சு நீங்க காமடி கீமடி பண்ணலயே???

anbudan vaalu said...

@திகழ்மிளிர்...

ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்துருக்கீங்க....ரொம்ப சந்தோஷம் :))

\\/அ.மு.செய்யது said...

அந்த கடைசி போட்டோக்கு முன்னாடி இருக்கறது தான் நீங்களா ??

இல்ல கையில் தர்பூசணி வச்சிருக்கறது தான் நீங்களா ??/

ரொம்ப தான் குறும்பு\\

ஆமாங்க திகழ்மிளிர்....ஒரு அப்பாவிய எப்படி ஓட்டறாங்க பாருங்க....

\\/anbudan vaalu said...

தர்பூசணி வச்சிருக்கற ஜீவன் ப்லாக் எழுதும்னு நீங்க நம்பினீங்கன்னா..சந்தேகமே இல்லாம அது நான் தான்.../

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்\\

இதுக்கு என்ன அர்த்தம்???

அ.மு.செய்யது said...

\\/anbudan vaalu said...

தர்பூசணி வச்சிருக்கற ஜீவன் ப்லாக் எழுதும்னு நீங்க நம்பினீங்கன்னா..சந்தேகமே இல்லாம அது நான் தான்.../

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்\\

இதுக்கு என்ன அர்த்தம்???//

திக‌ழ்மிளிர் என் க‌ருத்தோடு ஒத்து போகிறார் என்று அர்த்த‌ம்.

ந‌ல்லா கேக்குறாங்க‌ய்யா டீட்டிய‌லு.

அ.மு.செய்யது said...

அப்டேட் பண்ணிட்டேளா ?? இப்ப தான் பாக்குறேன்.

Nice !!!!

omer said...

பயணக்கட்டுரை அருமையாக இருந்தது. இந்தக்காதில் வாங்கி அந்தக்காதில் விட்டு வந்த ஒவ்வொரு இடத்தின் பெயரையும் மறுபடி அசைபோட கிடைத்த அருமையான வாய்ப்பு.பிள்ளைகள் எவ்வளவு சமர்த்தாக ஒவ்வொரு விசயத்தையும் உள்வாங்கிக் கொள்கிறார்கள் என்பதை உணரமுடிகிறது..

நான் தான் எந்த இடத்திற்கு சென்றாலும் அந்தந்த இடத்தை ஞாபகம் வைத்துக் கொள்வேன் என்ற கர்வத்தை தகர்ப்பது போல் உமர் அனாயாசமாக இடத்தை விவரித்த விதம் சிலிர்க்க வைத்தது.. இரு அருமையான பிள்ளைகளைப் பெற்றமைக்கு மனைவிக்கு ஒரு சபாஷ்..இறைவனுக்கு நன்றி....

அலுப்பு பார்க்காமல் முகம் சுளிக்காமல் அனைத்து பணிவிடைகளையும் செய்து தந்த திரு திருமதி ரஃபீக் அங்கிள் (அட பழகிப்போச்சு சொல்ல விடுங்களேன்..) ஜிப் (என்றால் பேசமாட்டாராம்) அன்ஜிப் (என்றால் பேசுவாராம்) என்று கண்ணாலும் கைசைகையாலும் திகைக்க வைத்த நதிரா செல்லம்.. அடம் பிடித்தாலும் அன்பில் பஞ்சம் வைக்காத தஸ்னிம்..பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றும் டாக்ஸி டாக்ஸி எரினா. பல்லைப் பலி கொடுத்துவிட்டு பாசத்தை பத்திரமாய் பாதுகாக்கும் கதிஜாம்மா.. அழகன் அஸார் உடலைப்போலவே மனதையும் கொண்ட ரெஜியா.. தம்பி கபூர், அம்மாவை அவ்வப்போது ஞாபகப்படுத்திய தமக்கை, நினைவு தெரிந்த நாள் முதல் உழைக்கும் அண்ணன்..அன்பே உருவான சாதிக்.. இன்னும் காணச் சென்ற அனைத்து சொந்தங்கள். அந்த சிங்காரச் சிங்கைக்கு கிடைத்த மகுடங்கள்..

இந்த சிங்கைப்பயணம் ஒரு மறக்கமுடியாத பயணமாக அமைந்தது.. இரு வாலுகளும் சந்தோசமாக இருந்தததைப் பார்க்கும் போது பணம் சூடாகக் கரைந்தாலும் மனம் பாலாக குளிர்ந்து.. அவர்களைக் குளிர்விக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று தோன்றியது..
Abu Vaalu

அ.மு.செய்யது said...

உங்க‌ள் த‌ந்தையின் பின்னூட்ட‌ம் உங்க‌ள் ப‌திவை விட‌ சுவார‌ஸ்ய‌மாக‌ இருந்த‌து என்றால் அது
மிகையாகா.

முழுமூச்சில் ஒரு பெரும் ப‌ய‌ண‌த்தையே முடித்தாற்போல‌ ஒரு உண‌ர்வு.

anbudan vaalu said...

ரொம்ப நல்லாயிருக்கு அத்தா...நான் நீட்டி முழக்கி சொன்னத நீங்க 'நச்சு'ன்னு சொல்லிட்டீங்க...

//இரு வாலுகளும் சந்தோசமாக இருந்தததைப் பார்க்கும் போது பணம் சூடாகக் கரைந்தாலும் மனம் பாலாக குளிர்ந்து.. அவர்களைக் குளிர்விக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று தோன்றியது..//

;)) சொல்லிட்டீங்கள்ல..சீக்கிரம்
அடுத்த ட்ரிப் போட்றலாம்...

anbudan vaalu said...

நன்றி sayed....
:))