இருண்ட கானகத்தில்
நான் வழி தவறி தடுமாறுகையில்
கைப்பிடித்து அழைத்து செல்லும்
கரங்கள் உனது.....
7th std முடிஞ்சு வந்த annual leave......ஒரு நாள் எங்க அப்பா என்ன கூப்பிட்டாங்க.
"பாப்பா....எங்க அப்பா இறந்தப்போ எனக்கு உன் வயசு தான்.நானும் உன்ன மாதிரி கவலையே தெரியாம தான் இருந்தேன்.ஆனா எங்க அப்பா போனதுக்கப்புறம் எல்லாமே மாறி போச்சு.....ரொம்ப கஷ்டப்பட்டோம்.நாங்க ஆறு பிள்ளைங்க.உன் பாட்டி ரொம்ப கஷ்டப்பட்டாங்க......இந்த மாற்றத்தை நாங்க யாருமே எதிர் பார்க்கல.இப்ப நான் உனக்கு சொல்றேன்......எப்பவேனாலும் எதுவேனாலும் நடக்கலாம்...அம்மாவும் தம்பியும் என்ன பண்ணுவாங்க???நீ தான் அவங்கள பாத்துக்கனும்.நல்லா படி.நல்ல நிலைமைக்கு வா.நீ உன்னயும் பாத்துக்கனும்,அவங்களையும் பாத்துக்கனும்.....வாழ்க்கைய எப்போதுமே ஈஸியா பாக்காதே........ "
இத ஏன் திடீர்னு கூப்பிட்டு சொன்னாங்கன்னு தெரியல....ஆனா இந்த வார்த்தைகள் என்னுள் ஏற்படுத்திய தாக்கம் அதிகம்...
நான் முன்னல்லாம் எங்கப்பாக்கிட்ட அதிகமா பேசக்கூட மாட்டேன்.....ஆனா இந்த ஒரு வருஷமா எங்களுக்குள்ள ஒரு நல்ல நட்பு ஏற்பட்டிருக்கு.அதுக்கு நான் சில பேருக்கு நன்றி சொல்லனும்.....அவங்க இல்லைனா எங்க நட்பும் இல்லாம போயிருக்கும்.....(குழப்பறேனோ???ஸாரி guys.....ஆனா எங்க அப்பாவுக்கு கண்டிப்பா புரியும்)
எங்கப்பாக்கிட்ட என்ன வேனும்னாலும் பகிர்ந்துக்கலாம்.....என்கிட்ட அவன் ப்ரபோஸ் பண்ணான் ஆனா எனக்கு பிடிக்கல என்பது உட்பட...he's such a friendly person....எங்கப்பா எனக்கு மட்டுமல்ல என் ப்ரென்ட்ஸுக்கும் ப்ரென்ட்.....
தொலைபேசியில் கேட்கும் என் குரல் மாற்றத்திலேயே என் சோகங்களை புரிந்து கொள்ளக்கூடிய ஜீவன்......என் எண்ணங்கள் புரிந்து என் நிலைக்கு இறங்கி வந்து விளக்கும் ஜீவன்.....என் திறமைகளை வளர்த்த ஜீவன்......இப்படி ஒரு தந்தை எனக்கு கிடைத்ததற்கு எல்லா புகழும் இறைவனுக்கே...........
இந்த வலைப்பக்கத்துலக்கூட பாக்கலாம்....என் பதிவுகள விட எங்கப்பாவோட பின்னூட்டங்கள் ரொம்ப நல்லாருக்கும்.......
dad i love you.............you are The Best.......

12 comments:
நம் ஆக்கங்களுக்கு முதல் ரசிகர்கள் நம் பெற்றோர்கள் தான்.
இன்ஸ்பிரேஷனும் அவங்க தான்...
நெகிழ வைத்த பதிவு !!!!
எல்லாப் புகழும் இறைவனுக்கே..
இப்போதைக்கு அழுகையைத் தவிர வேறெதுவும் வரலை..
பாசக்காரப் பயபுள்ளங்கிறத.. படிக்கிற வரியிலெல்லாம் பரவ விட்டிருக்கு என் செல்லம்..
கானகம் என்று இருக்க வேண்டும். காணகம் அல்ல..
@sayed
:)))
@omer
dad.......i love you always....
உங்க அத்தா கிட்ட எதாவது வேணும்னா கேட்டு வாங்கிக்க வேண்டியது தான ??
ஏன் இப்படி எமோசனல கிளப்பி விட்றீங்க..??
Dont publish this comment..
Dad is the first hero for everyone. We growing by looking at him. Learning things from what he does. I am happy to see that your dad had a good foresight to explain you about several things when you're kid. Appreciable thing:-) IT EVEN NICE THAT YOU STILL REMEMBER IT and SHARE WITH OTHERS.
thanx for your comments sundar...
:))
ஹ்ம்ம் .....
வார்த்தைகள் வரல ......
தந்தை யின் பாசம் என்பதே ஒரு சுகம் தான் ...
thanx mayvee....
:))
சரியாச் சொன்னார் நண்பர் சுந்தர்..
காலேஜில் சேர்ந்த மூன்றாம் வருடம் என நினைக்கிறேன்..ஒரு முறை வெளியில் வரும் போது தம்பிக்கு அட்வைஸ் பண்ணுங்க அத்தா.. நான் ஏழாம் வகுப்பு படிக்கிறப்ப சொன்னது போல என்றாய்.. எனக்கு என்ன சொன்னேன்னு தெரியலை ஆனால் ஏதோ உன்னை பக்குவப்படுத்துவது போல சொல்லியிருக்கிறேன் என்று மட்டும் புரிந்தது.. இப்போது தான் புரிகிறது அது என்னவென்று..
இப்ப கூட அவனுக்கு அந்த அட்வைஸ் பண்ணதில்லே.. அந்த அளவு பாரத்தை சுமக்க முடியாத குழந்தையாகவே அவன் எனக்கு தெரிகிறான்.. இன்னொன்று அதான் நீ இருக்கிறாயே அவனை பத்திரமாக பார்த்துக் கொள்வதற்கு..
சுந்தர் சொன்னது போல நான் அன்று சொன்னதை விட அதை இன்று வரை ஞாபகத்தில் வைத்திருந்ததுவும் அதனை இப்போது குழுமத்தில் பகிர்ந்து கொள்வதும் தான் சிறப்பான விசயம்.
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே...
அபுவாலு
Thanks uncle:-) You showed how good a father must be.. This our turn to show how good children we are in back to them:-) Hope we r in the right track..
Hey very nice blog!! Man .. Beautiful .. Amazing .. I will bookmark your blog and take the feeds also...
rH3uYcBX
Post a Comment