Tuesday, June 16, 2009

நிதர்சனமும் சில நிராசைகளும்....


செய்ய வேண்டிய வேலைகள்....
 காத்திருக்கும் பொறுப்புகள்....
பொறுமையிழக்கும் சில சில்லறை நிமிடங்கள்....
அழவைக்கும் சிலரின் சொல்லாயுதங்கள்.... 
நிறைவேறாது வருத்தும் ஆசைகள்....
மனிதம் தொலைத்த மனிதர்கள்....
அத்தனையும் மறந்து,
கவலை துறந்து
விண்ணில் பறக்க மனம் விழைகிறது.....
நிதர்சனமோ கூடை பொறுப்புகளால்
கூண்டில் அடைக்கிறது....

8 comments:

அ.மு.செய்யது said...

//கவலை துறந்து
விண்ணில் பறக்க மனம் விழைகிறது.....//

இதுவரைக்கும் நல்லா இருக்கு...

//நிதர்சனமோ கூடை பொறுப்புகளால்
தலையில் கொட்டுகிறது.....//

இத கொஞ்சம் இன்னும் வித்தியாசமா சொல்லியிருக்கலாமோ ?

Good one vaals !!!!

omer said...

பறக்க நினைக்கிறோம்.. புவியீர்ப்பு விசை பூமியை நோக்கி இழுக்கிறது..
நிதர்சனம் கூடையாய்.. சுமையாய் என்று கூப்பாடு போடுகிறோம்..
பறக்க நினைத்தது ஆசை.. அல்லது நிராசை.. புவியீர்ப்பு விசை.. நிதர்சனம்..

சரி.. புவியீர்ப்பு விசை ஒரு கணம் ஓய்வெடுத்துக்கொள்கிறேன் என்கிறது. என்னாவது நம் நிலை.??

நடக்க முடியாது.. படுக்க முடியாது.. உலகமே ஒழுங்காக இயங்க முடியாது..

என்ன செய்யலாம்..

நிதர்சனத்தை நிஜமாக்கி கொள்வோம்..
கனவுகளை நிதர்சனத்தின் நிழலாக்கி கொள்வோம்..
எண்ணற்ற அனுக்கிரகத்தை என்னுள் படைத்த இறைவன்
ஏதோ நன்மைக்காகவே
அனைத்து சுமையையும் அள்ளித் தருகிறான் என்று அர்த்தம் கொள்வோம்..
வாழ்க்கையின் சுவை கூடும். சுமை குறையும்..

குறிப்பு: என்னுடைய காலத்தில் நானும் தான் அங்கலாய்த்தேன்..நிதர்சனத்தை எடுத்துச் சொல்லும் நெருங்கிய உள்ளம் இல்லாததால்..

abu vaalu

anbudan vaalu said...

நன்றி sayed.....

மாத்திட்டேன்....பாத்தீங்களா???

anbudan vaalu said...

\\ என்னுடைய காலத்தில் நானும் தான் அங்கலாய்த்தேன்..நிதர்சனத்தை எடுத்துச் சொல்லும் நெருங்கிய உள்ளம் இல்லாததால்..\\

:)).....நெருங்கிய உள்ளத்திற்கு என் நன்றிகள்...

அ.மு.செய்யது said...

//நிதர்சனமோ கூடை பொறுப்புகளால்
கூண்டில் அடைக்கிறது...//

கிரேட்....

அ.மு.செய்யது said...

//ஏதோ நன்மைக்காகவே
அனைத்து சுமையையும் அள்ளித் தருகிறான் என்று அர்த்தம் கொள்வோம்..
வாழ்க்கையின் சுவை கூடும். சுமை குறையும்..//

ஆழ்ந்த கருத்துக்கள்.

யாருமே இல்லாத கால்பந்து ஆடுகளத்தில் நம்மால் ஆயிரம் கோல் போட முடியும்.ஆனால் நாம் யாரும் அதை வெற்றி என கொண்டாடுவதில்லை.காலை இடறி விட்டும்,நம்மை முட்டி மோதும் எதிரணியினரின் சவால்களை முறியடித்து இலக்கை அடைதலில் தான் சுவாரஸியமே அடங்கியிருக்கிறது.

இறைவன் நம் வாழ்வில் சுமைகளையும் தடைகளையும் தந்து தான் உப்புச்சுவை சேர்க்கிறான்.

கலாட்டா அம்மணி said...

சூப்பரப்பு..

ஜியா said...

Good one!!