Monday, April 13, 2009

happy birthday brother!!!!!

( ஒரு காலத்துல இப்படி தான் இருந்தான்...............)



என் அருமை உடன்பிறப்புக்கு பிறந்த நாள்......அன்னைக்கு தமிழ் புத்தாண்டாவும் இருக்கறதுன்னால, என் பிறந்த நாள ஊரெல்லாம் கொண்டாடுதுன்னு ஸீன் போட்டுட்டிருந்தான்....இப்ப கலைஞர் அதுக்கு ஆப்பு வச்சுட்டாரு....
என்னை மாதிரி ஒரு அக்காவிற்கு இப்படி ஒரு தம்பியான்னு நிறைய பேர் ஆச்சரியப்பட்டிருக்காங்க.....ஏன்னா நான் அவ்வளவு அமைதி,அடக்கம்.......அட நெசமாத்தான் சொல்றேன்.....ஆனா அய்யா, எனக்கு அப்படியே உல்டா......எங்களுக்குள்ள ஒரு பெரிய வித்தியாசம் என்னன்னா.....நான் பெரிய தவறெல்லாம் அமைதியா செஞ்சு எஸ்கேப்பாயிடுவேன்..அவன் சின்ன தப்பையும் பெருசா செஞ்சு மாட்டிப்பான் ;)))

நாங்க ஒன்னும் பாசமலர் சென்டி டைப் இல்லை.....சண்டை,கோபம்ன்னு sibling rivalry எங்களுக்குள்ள full formல இருக்கும்....இப்ப கொஞ்சம் பரவாயில்லை......


நான் 6 th படிக்கற வரைக்கும் அவன் பிறந்த நாளைக்கு ஸ்கூலாகவும் என் பிறந்த நாளைக்கு லீவாகவும் இருக்கும்.அப்ப நானும் அவன் கூடவே சாக்லேட் கொடுத்துடுவேன்....7 th லேர்ந்து அப்படியே உல்டாவாச்சு.அவன் என் பிறந்த நாளைக்கு சாக்லேட் கொடுக்க ஆரம்பிச்சான்....எப்பவும் எங்க இரண்டு பேருக்குமே புது டிரஸ்.....இப்படி பல mutual benefits share பண்ணியிருக்கோம்.......




ஒரு காலம் வரைக்கும் என்னை விட கட்டையா தான் இருந்தான்.....இப்ப நான் அவன் தோள் அளவுக்கூட இல்லை.....என் கைய பிடிச்சிட்டு பாவமா வந்த காலம் போய் இப்ப எனக்குத் துணையா வந்திட்டிருக்கான்......




எனக்கு அண்ணன் இல்லையேன்ற ஏக்கம் அதிகம்...ஆனா இப்ப யோசிக்கிறப்போ அண்ணா இருந்திருந்தாகூட என் தம்பிக்கூட இருக்கும் அளவு ஜாலியா இருந்திருப்பேனான்னு தெரியல.......




i'm proud to be your sister.I pray to Almighty to grant you happiness and make you prosperous both in this life and the herafter............happy birthday da............

(இப்போ இப்படி ஆயிட்டான்........................)

16 comments:

பிரேம்குமார் said...

பாவம் புள்ள. உங்க தம்பியா அவர் படுற பாடு அவர் முகத்துலேயே தெரியுது....

பிறந்த நாள் வாழ்த்துகள் தம்பி

omer said...

thank u......but yen akka yennavida koncham personality kammi thaan.athaan major different....

anbudan vaalu said...

\\omer said...

thank u......but yen akka yennavida koncham personality kammi thaan.athaan major different....\\

நான் உன்ன விட personality கம்மியா ????!!!!! டேய்....இன்னைக்கு பிறந்த நாள் அதனால பிழைச்சுப்போ..நாளைக்கு போன் பண்ணி திட்டறேன்.....

anbudan vaalu said...

நன்றி பிரேம்....

\\பாவம் புள்ள. உங்க தம்பியா அவர் படுற பாடு அவர் முகத்துலேயே தெரியுது....\\

அவன் பாவமா??? அவனோட கமென்ட படிங்க.... அப்பவாவது யார் பாவம்ன்னு புரிஞ்சுப்பீங்க.....

MayVee said...

nalla akka ; nalla thambi...

unga thambikku en birthday wishes...


en pirentha naalai ulagame kodadum...

மகா said...

உங்க தம்பிக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
உங்களை மாதிரி எனக்கும் ஒரு அண்ணாவோ தம்பியோ இல்லைனு கவலையா இருக்கு.

மகா said...

ச்சே இப்படி ஒரு தம்பி தங்கக் கம்பி எனக்கு இல்லாமப் போச்சே.

Anonymous said...

உங்கள பெத்து வளர்த்ததற்கு ரெண்டு எருமை மாட்டை வளர்த்திருக்கலாம் என்றெல்லாம் மற்ற பெற்றோர் திட்டுவதைப் போல் என்னை திட்ட முடியாமல் ஆக்கிய என் இரு கண்களே...

கண்ணா இருப்பீங்கன்னு நினைச்சா இங்கிலீஸ் Gun (துப்பாக்கி) ணா இருந்து இப்படி சுட்டுக்கிறீங்களே..

இருந்தாலும் அன்பு மாறாத உங்கள் அடிதடிக்கு வாழ்த்துக்கள்..

திட்டிக்கொண்டே அக்கா காட்டும் அன்பும்.. அவ்வளவு கோபத்துக்கும் அக்கா என்று அழைக்கும் தம்பியும் அடக்கமும்.. இந்த சண்டை கூட இறைவனின் அருளோ என எண்ணத் தோன்றும்..

பாவம் .. அம்மா காரங்க தான் மண்டை காஞ்சிப் போகும் அளவு டென்ஷனாக இருக்க வேண்டியுள்ளது..

anbudan vaalu said...

நன்றி mayvee......

\\en pirentha naalai ulagame kodadum...\\

jan 1 or april 1 ??? ;))

anbudan vaalu said...

நன்றி மகா....

\\ச்சே இப்படி ஒரு தம்பி தங்கக் கம்பி எனக்கு இல்லாமப் போச்சே.\\

நாட்டாம....தீர்ப்ப மாத்தி சொல்லு....

anbudan vaalu said...

\\உங்கள பெத்து வளர்த்ததற்கு ரெண்டு எருமை மாட்டை வளர்த்திருக்கலாம் என்றெல்லாம் மற்ற பெற்றோர் திட்டுவதைப் போல் என்னை திட்ட முடியாமல் ஆக்கிய என் இரு கண்களே...\\

இதுல ஏதாவது உள்குத்து இருக்குமோ???? திட்டற மாதிரியே இருக்கே.....

\\கண்ணா இருப்பீங்கன்னு நினைச்சா இங்கிலீஸ் Gun (துப்பாக்கி) ணா இருந்து இப்படி சுட்டுக்கிறீங்களே..\\

எங்கள வச்சு காமெடி கீமெடி பண்ணலயே???!!!

\\பாவம் .. அம்மா காரங்க தான் மண்டை காஞ்சிப் போகும் அளவு டென்ஷனாக இருக்க வேண்டியுள்ளது..\\

ஃப்ரீயா விடுங்க...ஃப்ரீயா விடுங்க....அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.....

ஜி said...

Happy bday to your Bro...

// கட்டையா தான் இருந்தான்.....//

Neenga then thamiznaada?? illa.. engoor pakkamthaan kattai nu use pannuvaanga... maththa edathulalaa kuttai thaan...

anbudan vaalu said...

நன்றி ஜி....

\\Neenga then thamiznaada?? illa.. engoor pakkamthaan kattai nu use pannuvaanga... maththa edathulalaa kuttai thaan...\

அப்படியா....எங்க ஊர் உங்க ஊர்லேர்ந்து கிட்டதட்ட 6 மணி நேரம் ஜி...

அ.மு.செய்யது said...

//Anonymous said...
உங்கள பெத்து வளர்த்ததற்கு ரெண்டு எருமை மாட்டை வளர்த்திருக்கலாம் என்றெல்லாம் மற்ற பெற்றோர் திட்டுவதைப் போல் என்னை திட்ட முடியாமல் ஆக்கிய என் இரு கண்களே...

கண்ணா இருப்பீங்கன்னு நினைச்சா இங்கிலீஸ் Gun (துப்பாக்கி) ணா இருந்து இப்படி சுட்டுக்கிறீங்களே..

இருந்தாலும் அன்பு மாறாத உங்கள் அடிதடிக்கு வாழ்த்துக்கள்..

திட்டிக்கொண்டே அக்கா காட்டும் அன்பும்.. அவ்வளவு கோபத்துக்கும் அக்கா என்று அழைக்கும் தம்பியும் அடக்கமும்.. இந்த சண்டை கூட இறைவனின் அருளோ என எண்ணத் தோன்றும்..

பாவம் .. அம்மா காரங்க தான் மண்டை காஞ்சிப் போகும் அளவு டென்ஷனாக இருக்க வேண்டியுள்ளது..
//

இந்த பின்னூட்டம் யாருடையதென்று எனக்கு தெரியும்.

Indian Muslimah said...

wow ningalum thambiyudaiyaala? maasha Allah. neraya common vishayangal iruku. :) naanum en thambiyum kooda damal dumeelnu adichippom.. he he

anbudan vaalu said...

@Indian Muslimah

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....அடி இருக்கும் இடத்தில் தான் அன்பு இருக்கும்(ஹி..ஹி...சும்மா இப்படி சொல்லிக்க வேண்டியது தான் ;)) )