
அவன் கடமை
பணி செய்து கிடப்பதே....
அவனுடன் வேலைப் பார்க்கும்
பலநூறு பொச்சம் பொறுக்குவோரில்
அவனும் ஒருவன்.
பணி செய்து கிடப்பதே....
அவனுடன் வேலைப் பார்க்கும்
பலநூறு பொச்சம் பொறுக்குவோரில்
அவனும் ஒருவன்.
அவனுக்கு தாய் ஒன்றுதான
ஆனால் தந்தையர் பலர்....
உடனிருக்கும் அனைவரும் ஒரு தாய் மக்கள்
தாயே ஆட்சி செய்யும் ராணி
ஆனாலும் அவன் இளவரசனில்லை.
அன்று விடிந்ததோ வழக்கம் போல
ஆனால் முடிந்தது என்னவோ
அன்று மட்டும் வித்தியாசமாய்....
என்றைக்கும் போல்தான்
புறப்பட்டான் அவனும் கடமையை செய்ய.
வரிசையிலேயே சென்று பழக்கப்பட்டவன்
சுறுசுறுப்பானவன்,தீவிர முயற்சியுடையான்
எதிர்புறம் வருவோரையெல்லாம் நலம்
விசாரிக்கும் நற்பண்புடையான்...
கடமையே கண்ணாய் முன்னேறிக் கொண்டிருந்தான்.
பொச்சத்தின் வாடை அலைவரிசையாய் தாக்க
தூண்டப் பட்ட புலண்களுடன் நகர்ந்தான் பக்கம்...
தன் ஐந்தறிவில் ஏதோ ஒன்றால்
தன் இரையை உறுதி செய்தான்;
சகோதரர்களுக்கும் தெரியப்படுத்தினான்.
அவர்களும் வந்தனர்;மகிழ்ந்தனர்;
தங்களுக்குள் ரகசியங்கள் பேசினர்...
ஆனந்தமாய் உண்ணலாம்
சேமித்து வைக்கலாம் என பேசியபடியே
உணவில் வாய் வைத்தனர்.
சேமித்து வைக்கலாம் என பேசியபடியே
உணவில் வாய் வைத்தனர்.
உண்ட சிறிது நேரத்தில்
சில பல மாற்றங்கள்....
ஆங்காங்கே சுருண்டனர்;துடித்தனர்;
கண் முன்னே மரிக்கும் தம் உறவுகளைக் கண்டான்
அவனுக்குத் தெரியும் தன் முடிவும் அதுதானென்று.
விஷம் வைத்துக் கொல்ல பட்ட
அந்த நூறுக்குள் அடங்கிய பேர்களுள்
அவனும் ஒருவன்....
செய்திகளில் வரவும் இல்லை
யாரும் இரங்கல் தெரிவிக்கவும் இல்லை
சத்தமின்றி சிந்தப்பட்ட அவ்வுயிர்கள்
என்றும் கணக்கில் எடுக்கப் பட்டதுமில்லை....
( இது கலாட்டா அம்மணி அழைத்திருந்த கவிதை தொடர் பதிவிற்காக....யாரை அழைக்கலாம் என்று குழப்பம்.அதனால் இப்பொழுது யாரையும் அழைக்கவில்லை )

11 comments:
aaha!! kavithaiyum ippa sangili thodarla vanthidichaa?? superaa ezuthi irukeenga....
ஒரு எறும்புக்கு இவ்வளவு அக்கப்போரா..
நல்லா இருக்கு கவிதை வால்ஸ்...
@ஜி
நன்றி ஜி...
:))
@அ.மு.செய்யது
நன்றி sayed...
:))
எறும்பின் எண்ணத்தில்...
அருமை...
இதை போல் கவிஞர் வைரமுத்து அவர்களின் வரிகள்
எறும்பின் கோணத்தில்
” உங்கள் அகிம்சை போராட்ட
ஊர்வலத்தில்
எங்கள்
நான்காயிரம் முன்னோர்கள்
நசுங்கி செத்தது “
அருமையான கவிதைக்கும்... அழகான வரிகளுக்கும்... வாழ்த்துக்கள்...
haa haa அருமையான கவிதை :-) பிச்சுடிங்க தலைவா..தொடர்ந்து எழுதுங்க
@kanna
நன்றி கண்ணா...வருகைக்கும் வாழ்த்துக்கும்....
@suresh
நன்றி சுரேஷ்...வருகைக்கும் வாழ்த்துக்கும்.ஆனா 'தலைவா'ங்கறது இடிக்குதே.... :))
arumai arumai.
nalla kavithai elutharinga. valthukkal.
நன்றி மகா....
:)))
இப்படி இனப்படுகொலையை யார் செய்கிறார்கள்??..
கண்டிப்பாக ஐயனா சபையிடம் புகார் செய்யவேண்டும்..
கவிதை சூப்பரப்பு..
அகிம்சைப் பிரச்சாரம்..
குழல் விளக்கினடியில்
அசையும் எண்ணெய்த்தாள்..
ஹைகூ கவிதை.. எப்போதோ படித்தது..
Post a Comment