Tuesday, March 24, 2009

பழமொழியாம் பழமொழி.......


நம்ம கலாட்டா அம்மணி நம்மள பழமொழிகள் இடச் சொல்லி அழைச்சிருந்தாங்க.வர வர பாசக்கார எதிரிங்க தொல்ல தாங்க முடியலப்பா......யோசிக்கப் புடிக்காத நம்மள இப்படியா யோசிக்க வைக்கறது????!!!!ஆனா வகையா வந்து மாட்டின புத்தகத்திலிருந்து இதோ சில பழமொழிகள்.....................



அதிகாலை எழாதவன் வேலை அழுதாலும் தீராது


அற்பக் கோபத்தால் அறுந்த மூக்கு ஆயிரம் சந்தோஷத்தால் திரும்ப வருமா?


இட்டுக் கெட்டாருமில்லை,ஈயாது வாழ்ந்தாருமில்லை


இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது


உண்டு கொழுத்தால் நண்டுவலை தாங்காது


உறவு போகாமல் கெட்டது;கடன் கேட்காமல் கெட்டது


எதிரி சுண்டெலியானாலும்,எச்சரிக்கையாக இருக்க வேண்டும்


எரிகிற வீட்டை அணைக்க கிணறு வெட்ட நாள் பார்த்தானாம்


கடன் இல்லாத கஞ்சி கால் வயிற்றுக்குப் போதும்


தன்னை வென்றான் தரணியை வெல்வான்



நான் இந்த பழமொழி பதிவை தொடர அழைப்பது இவர்களை தான்....................


அ.மு.செய்யது


mayvee


கவின்


ஜமால் காக்கா

10 comments:

MayVee said...

நல்ல இருக்கு .....
சரிங்க .....
நாளை இந்த தொடர் பதிவை போடுகிறேன் ....

இந்த பழமொழி ன்னு சொல்லுரிங்க .....
தமிழ் மாதிரி அதும் ஒரு மொழி யா

anbudan vaalu said...

நன்றி mayvee....

\\இந்த பழமொழி ன்னு சொல்லுரிங்க .....
தமிழ் மாதிரி அதும் ஒரு மொழி யா\\

ஸ்ஸஸ்ஸஸ்....கடவுளே.....என்னை காப்பாற்று...எனக்கு பொறுமையை தா...

அ.மு.செய்யது said...

//எரிகிற வீட்டை அணைக்க கிணறு வெட்ட நாள் பார்த்தானாம்//

இது சூப்ப‌ர்.

அ.மு.செய்யது said...

ஆனாலும் எப்ப‌டியோ ப‌ழிக்கு ப‌ழி வாங்கிட்டீங்க..இப்ப சந்தோசம் தானே.

பூனேல நான் எங்க‌ போயி ப‌ழ‌மொழிய‌ தேடுவேன்..ஐய‌கோ !?!?!?!?!?!?!

Anonymous said...

//உண்டு கொழுத்தால் நண்டுவலை தாங்காது//

- தங்காது.

மகா said...

பழமொழி நல்லாருக்கு. எனக்கும் அவங்க ஹோஒர்க் கொடுத்திருக்காங்க. நான் இன்னும் செய்யாம இருக்கேன்.(செய்வேன்). இன்னும் எந்த புத்தகமும் மாட்டல. அவ்வையார்கிட்ட இருந்து சுடலாம்னு இருக்கேன.

anbudan vaalu said...

\\ அ.மு.செய்யது said...
//எரிகிற வீட்டை அணைக்க கிணறு வெட்ட நாள் பார்த்தானாம்//

இது சூப்ப‌ர்.\\

நன்றி....
:))

anbudan vaalu said...

\\பூனேல நான் எங்க‌ போயி ப‌ழ‌மொழிய‌ தேடுவேன்..ஐய‌கோ !?!?!?!?!?!?!\\

என்ன நீங்க????நீங்களே ஒரு நடமாடும் நூலகம் sayed....
;)))

anbudan vaalu said...

\\ Anonymous said...
//உண்டு கொழுத்தால் நண்டுவலை தாங்காது//

- தங்காது.\\

அப்படியா??? ஆனா அந்த புக்குல தாங்காதுன்னுல குடுத்துருந்துச்சு...

anbudan vaalu said...

@மகா

நன்றி மகா....

\\அவ்வையார்கிட்ட இருந்து சுடலாம்னு இருக்கேன\\

பாத்து மகா அவ்வையார் பேத்தி யாராவது கேஸ் போட்டுடபோறாங்க ;))