Sunday, January 18, 2009

குழந்தை ஒரு கண்ணாடி




தாய் தன் குழந்தையின் மன,உடல் வளர்ச்சியில் பெரும் பங்காற்றுகிறாள்.......குழந்தை கருவாக இருக்கும்பொழுதே தாயின் neurohormonal systems மூலம் அவளுடைய emotions குழந்தைக்குப் போகிறது......அதாவது கர்ப்பகாலத்தில் தாயின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள் குழந்தையிடம் எதிரொலிக்கும்.......



ஒரு குழந்தையின் குணநலன்கள் தாயின் வளர்ப்பைப் பொருத்தே அமையும்....அதைதான் 'நூலை போல சேலை;தாயை போல பிள்ளை' என்பர்.....



1.over protective mother


இந்த தாய்மார்கள்,தங்கள் குழந்தைகளை பொத்தி,பொத்தி வளர்ப்பார்கள்.தனியே எதனையும் செய்யவோ,எங்கேயும் போகவோ விடமாட்டார்கள்.குழந்தை தன் அம்மாவை முழுவதுமாக சார்ந்திருக்கும்......இப்படிப்பட்ட தாயின் குழந்தைகள் எப்படி இருப்பார்களென்றால்,


*சொந்தமாக முடிவெடுக்க பெரிதும் தயங்குவார்கள்

*வாழ்க்கையில் சின்ன பிரச்சனைகளைக் கூட எதிர் கொள்ள தெரியாமல் சோர்ந்து விடுவர்

*எளிதாக கீழ்ப்படிபவர்களாகவும்,கூச்ச சுபாவம் உடையவர்களாகவும்,தன்னம்பிக்கை அதிகம் இல்லாதவர்களாகவும் இருப்பர்.


2.over indulgent mother


இந்த தாய்மார்கள்,தங்கள் பிள்ளைகளுக்கு அளவுக்கு மீறிய செல்லம் கொடுப்பர்.இவர்களின் குழந்தைகள்,


*முரட்டுத்தனமாகவும்,பிடிவாதக்காரர்களாகவும்,தாங்கள் நினைத்து நடக்காவிட்டால் அழுது,ஆர்ப்பாட்டம் செய்பவர்களாகவும் இருப்பர்

*நினைத்ததெல்லாம் நடக்க வேண்டும் என எண்ணுவார்கள்



3.under affectionate mother


இந்த தாய்மார்கள்,தங்கள் குழந்தைகளிடம் தன் அன்பைக் குறைவாக அல்லது முழுவதுமாக வெளிக்காட்டாதவர்கள்.இவர்களின் குழந்தைகள்,


*அன்புக்கு ஏங்குபவர்கள்

*மிகுந்த கூச்ச சுபாவம் உடையவர்கள்

*யாரிடமும் அதிகம் பேசாதவர்கள்



4.rejecting mother


இந்த தாய்மார்கள்,தங்கள் குழ்தைகளை வெறுத்து ஒதுக்குபவர்கள்.சில நேரங்களில் துன்புறுத்தவும் செய்வார்கள்.இவர்களின் குழந்தைகள்,


*அதிகம் உணர்ச்சிவசப் படுவார்கள்

*முரட்டுத்தனத்துடன் இருப்பார்கள்

*எதையேனும் செய்து,பிறர் கவணத்தைக் கவர முயற்ச்சிப்பார்கள்

*தன்னம்பிக்கை இல்லாமல் இருப்பார்கள்


5.authoritarian mother


இந்த தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை அடக்கி ஆள்பவர்கள்.எப்போதும் குழந்தைகளை குறைக் கூறிக் கொண்டே இருப்பர்.இவர்களின் குழந்தைகள்,


*முதலில் அடங்கி நடந்தாலும்,பின் நிச்சயம் எதிர்மறையாக நடப்பார்கள்

*வீட்டை விட்டு வெளியேறிவிட நினைப்பார்கள்......




குழந்தைகள் கண்ணாடி போன்றவர்கள்........நம்மையே அவர்கள் பிரதிபலிக்கிறார்கள்..........




12 comments:

mohamed said...

good research work...under which category do you come dude...2nd one uh..???

அ.மு.செய்யது said...

குழந்தைகள் உளவியல் நல்ல ஆய்வுக் கட்டுரை...

உபரி தகவல்: ஒரு குழந்தை 6 வயது அடையும் போதே அதன் 90% மூளை வளர்ச்சியடைந்து விடுகிறது.அந்த 6 வருடங்களில் அக்குழந்தை தன் பெற்றோர்களிடமிருந்து உள்வாங்கி கொள்ளும் மனோபாவம் தான் பிற்காலத்தில் தன்னையே அறியாமல் அக்குழந்தையின் மனோபாவமாக பிரதிபலிக்கிறது.

anbudan vaalu said...

thanx sayed.......

ஜி said...

are you a dentist of pshycologist?? :)) kalakkal research post.. BTW, you didn't tell how should a mother be... a mixture of all??

anbudan vaalu said...

thanx gee :))

a successful mother should be a mixture of 2tsp of protectiveness,2tsp of authority,2tsp of affection,2 tsp of care and lots and lots of love and patience :)))

thevanmayam said...

குழந்தைகள் கண்ணாடி போன்றவர்கள்........நம்மையே அவர்கள் பிரதிபலிக்கிறார்கள்.......... //

நல்ல உள்வியல் கட்டுரை..

anbudan vaalu said...

நன்றி thevanmayam.......

கலாட்டா அம்மனி said...

இதை கொஞ்சம் கொஞ்சம் எங்கோ..ஆ(நியாபகம் வந்துடுச்சு) paedoவில் படித்த மாதிரி இருக்கு, அப்ப ஒழுங்கா படிக்கல, உங்க பதிவுமூலம் நல்லா படிச்சுட்டேன்...

anbudan vaalu said...

@கலாட்டா அம்மனி

//இதை கொஞ்சம் கொஞ்சம் எங்கோ..ஆ(நியாபகம் வந்துடுச்சு) paedoவில் படித்த மாதிரி இருக்கு, அப்ப ஒழுங்கா படிக்கல, உங்க பதிவுமூலம் நல்லா படிச்சுட்டேன்...//

அதானே.....நாமல்லாம் அப்ப என்னத்த படிச்சோம்....நானும் இந்த பதிவ போடறதுக்கு நோண்டிய போது தான் தெளிவாக புரிந்து கொண்டேன்.......

Sundar said...

சரி...சில அம்மாக்களே இப்படித்தான். அவர்கள் குழந்தைகள் உலகத்தில் அவர்கள் மட்டுமே இருப்பதாக நினைப்பு. when their kids show otherwise, they either go for next kid or nurse the grudge & end up being bad MIL ;)

anbudan vaalu said...

@sundar

\\end up being bad MIL ;)\\

ஹா...ஹா...
:)))

anbudan vaalu said...

@sundar

\\end up being bad MIL ;)\\

ஹா...ஹா...
:)))