Wednesday, December 31, 2008

என் அருமை உடன்பிறப்பு.......


எப்பவும் எனக்கு இம்சை என்றவுடன் நினைவக்கு வருவது எனது அருமை உடன்பிறப்பு தான்........எங்கள் சண்டை வாய் சண்டை, கை சண்டை,கால் சண்டையாகவெல்லாம் வகை தொகையில்லாமல் போகும்.........எங்கள் நாட்டாமை ( அம்மா) வந்து எங்களிருவருக்கும் பலத்த சண்மானம் கொடுத்து பிரச்சணையை சுமூகப்படுத்தி வைப்பார்........நான் வண்டி ஓட்ட கற்றுக்கொண்டபோதுகூட நான் விழுந்ததில்லை,ஆனால் அவனை நம்பி அவனுடன் போய் தான் விழுந்திருக்கிறேன்........


கல்லூரி படிப்பிற்காக நான் வெளியூர் வந்ததும், 'நானே ராஜா, நானே மந்திரி' என ஸார் வீட்டில் தனி ராஜ்ஜியம் நடத்திக்கொண்டிருக்கிறார்........இட்லி சாப்பிட்டு கொண்டிருந்தால்கூட நான் தொலைபேசும் போதெல்லாம் சிக்கன்,பர்கர்,பிஸ்ஸா என ஸீன் போடுவான்.....

நான் ஊருக்கு வருகிறேன் என்றாலே, "அய்யோ!!!!" என்று ஒரு குரல் கேட்கும்......வேறெங்கிருந்து அவனிடமிருந்துதான்.........சில நேரம்......" அக்கா, எப்போ வருவே ???? " என்று பாசம் கொட்டும்.....அட பாசக்கார பயப்புள்ள என உருகிடக்கூடாது......பின்னாடி ஆப்பு இருக்குதுண்ணு அர்த்தம்......ஏதாவது record work,diagram இப்படி ஏதாவது இருக்கும்.......அதெப்படி நான் ஊருக்கு போற சமயம் பார்த்து இவ்வளவு record work கொடுக்கறாங்கன்னு எனக்கு இன்னும் புரியல..........


எங்களோட முக்கிய சண்டை இதுதான்.......நான் tv பார்க்கும்போது அவனும் வந்து tvக்கு சண்டை போடுவான்.......சரி போடான்னு நான் computerக்கு போனால், அவனும் அங்கு வந்து நிப்பான்........காதில் புகை வராத குறையாக நான் நிற்க,முறைத்துக்கொண்டு அவன் நிற்க......அடுத்து அங்கு இருப்பவர்கள் செய்ய வேண்டியது,பாதுகாப்பான இடத்துக்கு ஓடுவதுதான்.......



இப்போ அவனுக்கு body building ஜூரம் பிடிச்சிருக்கு.........arms காட்டி "தொங்குக்கா.......தொங்குக்கா"னு உயிரை வாங்கிக் கொண்டிருக்கிறான்.........அவனை நம்பி தொங்கி யார் கீழே விழறது ????!!!.......

அடிக்கடி அவன் கேட்கும் கேள்வி," அக்கா........எனக்கு six packs இருக்கா????"

நான் சொல்லும் பதில், " டேய்........உனக்கு இருக்கறது ஒரே pack....அதுவும் தொப்பை pack......ஆள விடுடா........"



இதுதான் என்னோட எருமை sorry அருமை தம்பி..........அவன் எவ்வளவுதான் இம்சையரசணா இருந்தாலும்,அவன் இல்லைணா எனக்கு ரொம்ப bore அடிக்கும்.......i love him a lot.......... :))))

21 comments:

அ.மு.செய்யது said...

//இப்போ அவனுக்கு body building ஜூரம் பிடிச்சிருக்கு.........arms காட்டி "தொங்குக்கா.......தொங்குக்கா"னு உயிரை வாங்கிக் கொண்டிருக்கிறான்.........//

எல்லா பசங்களும் இப்டி தான்...கெத்து காட்வாங்க !!!! ஜான் பிள்ளையானாலும் ஆண்பிள்ளையாக்கும்.
ithu vaaliba vaayasu......

//இட்லி சாப்பிட்டு கொண்டிருந்தால்கூட நான் தொலைபேசும் போதெல்லாம் சிக்கன்,பர்கர்,பிஸ்ஸா என ஸீன் போடுவான்.//

Its all common in politics.

அ.மு.செய்யது said...

உங்க தம்பியோட XEROX COPY தான் இங்கயும்...எங்க அக்கா ஒரு பதிவு போட்டா என்னைப் பத்தி இப்டி தான் போடுவாங்களோ !!!!

எவ்ள தான் இம்சை பண்ணினாலும் அதிகமா மிஸ் பன்றது நாங்க தான்.
Never showing it out !!!!!

anbudan vaalu said...

//ஜான் பிள்ளையானாலும் ஆண்பிள்ளையாக்கும்// என்னாதிது????!!!

//எவ்ள தான் இம்சை பண்ணினாலும் அதிகமா மிஸ் பன்றது நாங்க தான்.
Never showing it out !!!!!//
oh really????!!!!
காமடி கீமடி பண்ணலயே.......

அ.மு.செய்யது said...

எங்க அம்மா கூட இத
பார்த்து ஒரே சிரிப்பு...

Why blood ?? Same blood....

anbudan vaalu said...

:)))
தங்கள் அம்மாவிற்கு என் நன்றிகள்......

உங்க அக்காவிற்கு same pinch......
;)))

mohamed said...

it's all in the game....you have to bear this beautiful relation till you leave this world...whatever you speak against him but at last you said you "love him a lot" that's the beauty of this relationship...enjoy it buddy.....wassalam

anbudan vaalu said...

yes i know there's no way out.....
அதனால தான் மனச திடப்படுத்திட்டேன்......

mohamed said...

hye vaalu nee unmailae paeriya VAALUTHAN......))

anbudan vaalu said...

no no......என்னை மாதிரி ஒரு நல்ல அமைதியான,அடக்கமான ஜீவனை நீ வேறெங்கேயும் பார்க்க முடியாது.......
:))))

புதுகை.அப்துல்லா said...

வாலு அண்ணாச்சி நீங்க உங்க பிளாக்கை தமிழ்மணத்தில் இன்னும் இணைக்கவில்லையா??? காரணம் தமிழ்மணத்தில் இதுவரை உங்க பதிவுகள் என் கண்ணில் பட்டதேயில்லை.( ஒருவேளை நான் பார்க்கும் நேரத்தில் இல்லாதும் இருந்து இருக்கலாம்).

புதுகை.அப்துல்லா said...

நல்லா இருக்கு உங்க எதார்த்தமான எழுத்து :)

jalaludeens1 said...

//சில நேரம்......' அக்காஇ எப்போ வருவே ???? ' என்று பாசம் கொட்டும்.....அட பாசக்கார பயப்புள்ள என உருகிடக்கூடாது......//

அடிச்சிக்காதீங்க புள்ளங்களா.. அடிச்சிக்காதீங்க...

இப்படிக்கு

பாசக்கார 'பயபுள்ள' களின் பாசக்கார பய..

mohamed said...

what does "aapu" mean..remem the deal...tit for tat..

anbudan vaalu said...

நன்றி புதுகை அப்துல்லா.....தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்களுக்கும்......

நான் தமிழ்மணத்தில் இணையவில்லை....அப்புறம் முக்கியமான விஷயம்.....நான் அண்ணாச்சி இல்லை.....
:)))

anbudan vaalu said...

//jalaludeens1 said:
அடிச்சிக்காதீங்க புள்ளங்களா.. அடிச்சிக்காதீங்க...

இப்படிக்கு

பாசக்கார 'பயபுள்ள' களின் பாசக்கார பய..//

:)))

கலாட்டா அம்மனி said...

பாவம் உன் தம்பி, இப்படியா அவன் மானத்தை flight ஏத்துறது???

கலாட்டா அம்மனி said...

\\
அடுத்து அங்கு இருப்பவர்கள் செய்ய வேண்டியது,பாதுகாப்பான இடத்துக்கு ஓடுவதுதான்.......\\

அவ்வளவு பெரிய யுத்தமா???????

கலாட்டா அம்மனி said...

\\அடிக்கடி அவன் கேட்கும் கேள்வி," அக்கா........எனக்கு six packs இருக்கா????"\\

எங்க வீட்டில தான் இப்படி நடக்குதுனு நினைச்சேன், உங்க வீட்டிலேயும் இப்படிதான் நடக்குதா????

கலாட்டா அம்மனி said...

on the whole, இந்த பதிவு ரொம்ப humorousஆ இருக்கு வாலு...
i enjoyed reading it.

ஜி said...

//ஜான் பிள்ளையானாலும் ஆண்பிள்ளையாக்கும்.
//

ada!! ithu nalla irukke!!!... Unga thambikku ennoda vaathukkal :))

anbudan vaalu said...

@ஜி

[//ஜான் பிள்ளையானாலும் ஆண்பிள்ளையாக்கும்.
//

ada!! ithu nalla irukke!!!... ]

gee........you too :(((

//Unga thambikku ennoda vaathukkal :))//

அவனுக்கு எதுக்கு???அவங்கூட இருக்கறதுக்கு எனக்குதான் 'பரம்வீர்' சக்ரா அவார்ட் தரனுமாக்கும்......